ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசிக்கவுள்ளார்!

 

ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசிக்கவுள்ளார்!

உலகையே அச்சுறுத்திவந்த கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவிவருவதையடுத்து, மார்ச் 24ம் தேதி முதல் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு மே. 3 ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது

உலகையே அச்சுறுத்திவந்த கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவிவருவதையடுத்து, மார்ச் 24ம் தேதி முதல் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு மே. 3 ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. ஆனால் கொரோனா இல்லாத பகுதிகளில் ஏப்ரல் 20ஆம் தேதிக்கு பிறகு நிபந்தனைகளுடன் சில தளர்வுகள் இருக்க வாய்ப்புள்ளது என்றும் ஒருவேளை தளர்வுக்கு பிறகு கொரோனா  தொற்று அதிகமானால் மீண்டும் கடுமையான கட்டுபாடுகள் விதிக்கபடும் என்றும் மத்திய அரசு தெரிவித்தது. அதன்படி கடந்த 20 ஆம் தேதியிலிருந்து சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

மோடி

இந்நிலையில் ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி, கொரோனா தொடர்பாக மாநில முதல்வர்களுடன் 4ஆவது முறையாக வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் ஏப்.27 ஆம் தேதி மீண்டும் பிரதமர் மோடி மீண்டும் ஆலோசனை நடத்தவுள்ளார். ஏற்கனவே மே.3 ஆம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் நீட்டிப்பது குறித்து பரிசீலனை செய்ய மத்திய அரசு தெரிவித்துள்ளது.