ஊரடங்கை மீறுவோரிடம் வசூல்வேட்டை நடத்திய இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்! – நாகையில் அதிர்ச்சி

ஊரடங்கை மீறுவோரிடம் வசூல்வேட்டை நடத்திய இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்! – நாகையில் அதிர்ச்சி

நாகை மாவட்டம் வெளிப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்தவர் சிவப்பிரகாசம். இவர் மீது லஞ்ச புகார் இருந்து வந்தது. இந்த நிலையில், கொரோனா ஊரடங்கை காரணம் காட்டி அதிக வசூலில் ஈடுபட்டு வருவதாக இவர் மீது புகார் எழுந்தது. மேலும், அவர் ஊரடங்கை மீறுபவர்களிடம் லஞ்சம் வாங்கும் சிசிடிவி காட்சிகளை போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி சிவப்பிரகாசம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

நாகை மாவட்டத்தில் ஊரடங்கை மீறி வெளியில் நடமாடுவோரிடம் லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் வெளிப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்தவர் சிவப்பிரகாசம். இவர் மீது லஞ்ச புகார் இருந்து வந்தது. இந்த நிலையில், கொரோனா ஊரடங்கை காரணம் காட்டி அதிக வசூலில் ஈடுபட்டு வருவதாக இவர் மீது புகார் எழுந்தது. மேலும், அவர் ஊரடங்கை மீறுபவர்களிடம் லஞ்சம் வாங்கும் சிசிடிவி காட்சிகளை போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி சிவப்பிரகாசம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து சிசிடிவி கேமரா கட்சிகள் மற்றும் சிவப்பிரகாசம் லஞ்சம் வாங்கியது உண்மையா என்று விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி நாகை எஸ்.பி-க்கு தஞ்சாவூர் சரக டிஜிஜி லோகநாதன் உத்தரவிட்டார்.
இதன் அடிப்படையில் விசாரணை நடத்திய நாகை எஸ்பி, வெளிப்பாளையம் இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் லஞ்சம் வாங்கியது உண்மை என்று அறிக்கை அளித்தார். இதன் அடிப்படையில் சிவப்பிரகாசத்தை சஸ்பெண்ட் செய்து டிஜஜி லோகநாதன் உத்தரவிட்டுள்ளார். நாகையில் லஞ்சம் வாங்கியதால் இன்ஸ்பெக்டர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.