ஊரடங்கை மீறுபவர்களுக்கு கட்டாய தனிமை சிறை! – அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை

ஊரடங்கை மீறுபவர்களுக்கு கட்டாய தனிமை சிறை! – அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை

சென்னை ரிப்பன் மாளிகையில் கொரோனா தடுப்பு ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் மீன்வளம் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றார்.

ஊரடங்கு உத்தரவை மீறி சாலையில் திரிபவர்களுக்கு 14 நாள் தனிமை சிறை தண்டனை வழங்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் எச்சரக்கைவிடுத்துள்ளார்.
சென்னை ரிப்பன் மாளிகையில் கொரோனா தடுப்பு ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் மீன்வளம் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றார்.

144-violation-89

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, “வெளிமாநிலங்களில் இருந்து வந்து தங்கி பணியாற்றுபவர்களை யாராவது விரட்டினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சூப்பர் மார்க்கெட், மளிகைக் கடைகளில் பொருட்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் வியாபரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஊரடங்கை கடைப்பிடிக்காதவர்கள் சமுதாயத்திற்கு எதிரானவர்கள். இப்படி தேவையின்றி சாலைகளில் சுற்றித் திரிந்தால் 14 நாட்கள் கட்டாய தனிமை சிறையில் வைக்கப்படுவார்கள்” என்றார்.