ஊரடங்கை மீறி வெளியில் சுற்றுபவரா நீங்கள்? அப்போ இனிமே உங்க வண்டிய மறந்துடுங்க பாஸு!

 

ஊரடங்கை மீறி வெளியில் சுற்றுபவரா நீங்கள்? அப்போ இனிமே உங்க வண்டிய மறந்துடுங்க பாஸு!

இதுவரை  கொரோனா தொற்றால் 199 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,412 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை  கொரோனா தொற்றால் 199 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.  

TT

தமிழகத்தை பொறுத்தவரையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 834ஆக அதிகரித்துள்ளது. மேலும் 8 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 27 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் நாடு முழுவதும் வரும் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஒடிசாவில் வரும் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒவ்வொரு மாநிலமாக ஊரடங்கைநீடிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அதே சமயம் தமிழகத்தில் தற்போது காலை 6 மணி முதல் 1 மணிவரை மட்டுமே அத்தியாவசிய பொருட்கள் வாங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

TT

இந்நிலையில் ஊரடங்கை மதிக்காமல் மதியம் 1 மணிக்கு மேல் இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் சுற்றி திரியும் நபர்களின் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்று  உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனால்  உரிய காரணமின்றி அல்லது உரிய அனுமதியின்றி வாகனத்தில் வெளியே போக வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.