ஊரடங்கை மீறி பைக்கில் அதிவேக பயணம்… தடுத்த போலீசுக்கு அடி! – கேரளாவில் அதிர்ச்சி

கேரள மாநிலம் எர்ணாக்குளத்தைச் சேர்ந்தவர்கள் நிஷாத் (20), நிஷாதி (22). இவர்கள் இருவரும் நேற்று (புதன்கிழமை) காலையில் மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக பயணம் மேற்கொண்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளர். இதனால் ஆத்திரமடைந்த நிஷாத் மற்றும் நிஷாதி காவல்துறையைத் தாக்கியுள்ளனர். போலீசாரை இழுத்து அவர்களின் சீருடையையும் கிழித்ததாக கூறப்படுகிறது.

ஊரடங்கு உத்தரவை மீறி மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர், தடுத்த போலீசை தாக்கிய சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் எர்ணாக்குளத்தைச் சேர்ந்தவர்கள் நிஷாத் (20), நிஷாதி (22). இவர்கள் இருவரும் நேற்று (புதன்கிழமை) காலையில் மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக பயணம் மேற்கொண்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளர். இதனால் ஆத்திரமடைந்த நிஷாத் மற்றும் நிஷாதி காவல்துறையைத் தாக்கியுள்ளனர். போலீசாரை இழுத்து அவர்களின் சீருடையையும் கிழித்ததாக கூறப்படுகிறது.

police-beat-civiliation

இதைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 
கேரளாவில் பிரதமர் மோடி அறிவிப்பதற்கு முன்னதாகவே ஊரடங்கு அறிவிக்கப்பட்டுவிட்டது. ஆனாலும் மக்கள் கொரோனா அச்சமின்றி சாலையில் நடமாடி வருகின்றனர். காலியாக உள்ள சாலைகளில் இருசக்கர வாகனங்களில் வேகமாக பயணிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. அரசு அறிவிப்பை அனைவரும் மதிக்க வேண்டும் என்று போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.