ஊரடங்கை மீறி ஜோராக இயங்கி வந்த மசாஜ் சென்டர்: அதிகாரிகளை கண்டு ஓட்டம் பிடித்த பெண்கள்!

 

ஊரடங்கை மீறி ஜோராக இயங்கி வந்த மசாஜ் சென்டர்:  அதிகாரிகளை கண்டு ஓட்டம் பிடித்த பெண்கள்!

அதே சமயம் தமிழகத்தில் தற்போது காலை 6 மணி முதல் 1 மணிவரை மட்டுமே அத்தியாவசிய பொருட்கள் வாங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,738 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 483 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ள நிலையில் 248 பேர்  பலியாகி உள்ளனர்.  தமிழகத்தை பொறுத்தவரையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 834ஆக அதிகரித்துள்ளது. மேலும் 8 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 27 பேர் குணமடைந்துள்ளனர்.

tt

இதனால் நாடு முழுவதும் வரும் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஒடிசாவில் வரும் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒவ்வொரு மாநிலமாக ஊரடங்கைநீடிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அதே சமயம் தமிழகத்தில் தற்போது காலை 6 மணி முதல் 1 மணிவரை மட்டுமே அத்தியாவசிய பொருட்கள் வாங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

tn

இந்நிலையில், திருச்சி, உறையூரில் ஆயுர்வேத மசாஜ் சென்டர் ஒன்று ஊரடங்கு நேரத்திலும் இயங்கி வந்துள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியருக்கு வந்த புகாரின் பேரில் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் காமராஜ் திடீரென அந்த குறிப்பிட்ட மசாஜ் சென்டரில் சோதனை நடத்தினர். அப்போது ஊரடங்கை மீறி, குறிப்பிட்ட லைசன்ஸ் இல்லாமல் அந்த மசாஜ் சென்டரை நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்த பணி பெண்களிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இதை தொடர்ந்து மசாஜ் சென்டருக்கு சீல் வைக்கப்பட்டது.