ஊரடங்கை மீறியவர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட அபராதம் இவ்வளவா?!

 

ஊரடங்கை மீறியவர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட அபராதம் இவ்வளவா?!

கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்தும் விதமாக, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்தும் விதமாக, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் நிலவுகிறது. மக்கள் வீட்டிலேயே இருந்தாலும், அத்தியாவசிய தேவைக்களுக்கு வெளியே சென்று தான் ஆக வேண்டிய கட்டாயம் நிலவுகிறது. இதனிடையே கொரோனா அபாயம் புரியாமல் வெளியே சுற்றித்திரியும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன் படி, தடையை மீறி வெளியே வருபவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

ttn

இந்நிலையில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட 13 நாட்களில் 82,782 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் உத்தரவை மீறி வெளியே சென்ற 91,782 பேரை கைது செய்து பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஊரடங்கு உத்தரவை மீறி சென்றவர்களிடம் இருந்து ரூ.24,60,194 அபராதம் பெறப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.