ஊரடங்கை மீறினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை: உள்துறை அமைச்சகம்

 

ஊரடங்கை மீறினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை: உள்துறை அமைச்சகம்

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்துவருவதையடுத்து மத்திய அரசு ஏப்ரல் 14 ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனால் சாலை, வான் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் மக்களை வீட்டிலேயே இருக்குமாறு அரசு வலியுறுத்தி வருகிறது. இருப்பினும் விதியை மீறி மக்கள் வெளியே வருவதால், போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். குறிப்பாக அத்தியாவசிய தேவைகள் தவிர பிற தேவைகளுக்காக வெளியே வருபவர்கள் மீது போலீசார்வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.

ttn

இந்நிலையில் ஊரடங்கை மீறினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை செயலாளர் இதுதொடர்பாக கடிதம் எழுதியுள்ளார்.