ஊரடங்கை படிப்படியாக தளர்த்த அதிகாரங்கள் கொடுங்கள்! மோடியிடம் மாநில முதலமைச்சர்கள் கோரிக்கை….

 

ஊரடங்கை படிப்படியாக தளர்த்த அதிகாரங்கள் கொடுங்கள்! மோடியிடம் மாநில முதலமைச்சர்கள் கோரிக்கை….

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அமல் படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்கு படிப்படியாக தளர்த்த மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரங்கள் அளிக்கப்பட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியிடம் பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

ஊரடங்கு தொடங்கியதிலிருந்து ஐந்தாவது முறையாக  பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை  மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார். நாடு முழுவதும் மே 17-ஆம் தேதி ஊரடங்கு முடிவடைய உள்ளதால் அதை நீட்டிப்பது அல்லது அது தொடர்பான பல விஷயங்கள் குறித்து விவாதம் நடத்தப்பட்டது.

மோடி

சிகப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்களை தீர்மானிக்கக் கூடிய அதிகாரமும் மாநிலங்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்று காணொளி மூலம் நடந்த ஆலோசனையில் பல முதல்வர்கள் வலியுறுத்தி உள்ளனர். ஊரடங்கு படிப்படியாக தளர்த்த வேண்டும் என்றும் தொழில்துறை தங்களுடைய அன்றாட நடவடிக்கைகளை பாதுகாப்பான முறையில் நடத்த விரைந்து அனுமதி அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். அதே சமயத்தில் கொரோனா வைரஸ் பரவல் இன்னும் கட்டுக்குள் வரவில்லை என்றும் சில முதலமைச்சர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதனால் ஒரே கட்டத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தையும் தளர்த்தக்கூடாது கூடாது என்றும் முதல்வர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர். குறிப்பாக மாநிலங்களை கடந்து நடத்தப்படும் போக்குவரத்து சேவைகளை மிகவும் கவனத்துடன் கையாள வேண்டும் என்பது முதல்வர்களின் முக்கிய கோரிக்கை. இதில் ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்துக்கு செல்லும் பேருந்துகள், நீண்ட தூர ரயில் சேவைகள் மற்றும் விமான சேவைகள் ஆகியவை அடங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

மோடி
அனைத்து முதல்வர்களின் கருத்துக்களை கேட்டபின்பு பிரதமர் நரேந்திர மோடி தனது முடிவை தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஊரடங்கால் மாநிலங்கள் கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்து வருவதாகவும் ஆலோசனையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  எனவே அனைத்து மாநில முதல்வர்களும், பிரதமர் மோடியிடம் உடனடியாக நிதியுதவி வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிகிறது.