ஊரடங்கை கைவிட வாய்ப்பில்லை! – முதல்வருடன் ஆலோசனைக்குப் பிறகு மருத்துவக் குழு தகவல்

 

ஊரடங்கை கைவிட வாய்ப்பில்லை! – முதல்வருடன் ஆலோசனைக்குப் பிறகு மருத்துவக் குழு தகவல்

ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோனை கூட்டத்துக்குப் பிறகு குழுவில் இடம் பெற்றிருந்த பிரதீப் கவுர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

தமிழகத்தில் ஊரடங்கை கைவிட தற்போதைக்கு வாய்ப்பில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்திய பிறகு மருத்துவக் குழு அறிவித்துள்ளது.
ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோனை கூட்டத்துக்குப் பிறகு குழுவில் இடம் பெற்றிருந்த பிரதீப் கவுர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
“தமிழகத்தில் தற்போதைய சூழ்நிலையில் ஊரடங்கு 100 சதவீதம் முழுமையாக கைவிட வாய்ப்பு இல்லை. படிப்படியாகத்தான் குறைக்க வேண்டி உள்ளது. எனவே, ஊரடங்கைத் தொடர வேண்டும் என்று குறிப்பிட்டோம்.

lockdown-extended

அதே போல், தமிழகத்தில் ஊரடங்கை படிப்படியாகத் தளர்த்த வேண்டும் என முதலமைச்சரிடம் வலியுறுத்தினோம். ஊரடங்கை நீட்டிப்பதால் மக்கள் அச்சப்பட தேவையில்லை. தமிழகத்தில் மருத்துவ பரிசோதனையை மேலும் அதிகரிக்க வேண்டும். பாதிப்பு எண்ணிக்கை அதிகமாவதால் மக்கள் அச்சப்பட தேவையில்லை. அதிகமாக பரிசோதனை செய்துள்ளது சாதகமாக அமைந்துள்ளது.

corona-check-89.jpg

தொற்று ஒருவருக்கு உறுதியானால் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். கொரோனா தொற்று முற்றிலும் இல்லை என்ற நிலை வராது. கொரோனா பரவலை தடுப்பதில் மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். தனிநபர் இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்” என்றார்.