ஊரடங்கைத் தவிர்த்து மோடியின் பேச்சின் என்ன புதிதாக உள்ளது? – ப.சிதம்பரம் வேதனை

ஊரடங்கைத் தவிர்த்து மோடியின் பேச்சின் என்ன புதிதாக உள்ளது? – ப.சிதம்பரம் வேதனை

பிரதமர் மோடி இன்று ஊரடங்கை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டார். ஏற்கனவே பல மாநிலங்களும் ஊரடங்கை நீட்டித்த நிலையில் மத்திய அரசும் அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால், மக்களுக்கு ஏதோனும் பொருளாதார உதவி கிடைக்குமா என்ற அறிவிப்பை மோடி அறிவிக்கவில்லை.

பிரதமர் மோடியின் இன்றைய பேச்சில் ஊரடங்கைத் தவிர்த்து வேறு என்ன புதிதாக உள்ளது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரதமர் மோடி இன்று ஊரடங்கை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டார். ஏற்கனவே பல மாநிலங்களும் ஊரடங்கை நீட்டித்த நிலையில் மத்திய அரசும் அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால், மக்களுக்கு ஏதோனும் பொருளாதார உதவி கிடைக்குமா என்ற அறிவிப்பை மோடி அறிவிக்கவில்லை.

modi-78

ஊரடங்கை நீட்டிக்க வேண்டும், அதே நேரத்தில் பொருளாதார உதவிகளும் வேண்டும் என்று ப.சிதம்பரம் நீண்ட நாட்களாக வலியுறுத்திவந்தார். ஆனால், மோடியின் அறிவிப்பில் ப.சிதம்பரம் வலியுறுத்திய ஒரு விஷயம் கூட இடம் பெறவில்லை. இது குறித்து தன்னுடைய வேதனையை ப.சிதம்பரம் ட்விட்டர் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
“பிரதமரின் புத்தாண்டு வாழ்த்துக்களை ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக்கொள்வோம். ஊரடங்கை நீட்டிப்பதற்கான கட்டாயத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம். இந்த முடிவுக்கு ஆதரவு அளிக்கிறோம்.

ஆனால், ஊரடங்கைத் தவிர்த்து பிரதமரின் புத்தாண்டு வாழ்த்து செய்தியில் என்ன புதுமை இருக்கிறது. ஏழைமக்களின் வாழ்க்கை, அவர்களின் வாழ்க்கைக்கான போராட்டம் என எதுவும் மத்திய அரசின் முக்கிய கவனம் செலுத்தும் விஷயமாக இல்லை. 

மாநில முதல்வர்கள் தொடர்ந்து கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் பதில்தான் இல்லை. மார்ச் 25ம் தேதி அறிவிக்கப்பட்ட பொருளாதார உதவியில் கூடுதலாக ஒரு ரூபாய் கூட சேர்க்கப்படவில்லை. ரகுராம் ராஜன் முதல் ஜேன் ட்ரீஸ் வரை, பிரபாத் பட்நாயக் முதல் அபிஜித் பானர்ஜி வரை பலரது ஆலோசனைகள் ஓராண்டாகக் கேட்கப்படவில்லை.

ஏழைகள் 21 மற்றும் 19 நாள் ஊரடங்கின்போது, உணவு உள்ளிட்ட அனைத்துத் தேவைகளிலும் தங்களைத் தாங்களே பாதுகாத்துக்கொள்ளும்படி விடப்பட்டனர். ஏராளமான பணம் மற்றும் உணவு உள்ளது… ஆனால் அரசாங்கம் பணம் அல்லது உணவு எதையுமே விடுவிக்கவில்லை. என் அன்பான நாடு அழுகிறது” என்று கூறியுள்ளார்.

delhi-walking