ஊரடங்கைத் தளர்த்திய கர்நாடக… அதிகரித்த கொரோனா பாதிப்பு!

ஊரடங்கைத் தளர்த்திய கர்நாடக… அதிகரித்த கொரோனா பாதிப்பு!

கர்நாடகாவில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு, மாநிலத்துக்குள்ளான ரயில், பஸ் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அதிக பட்ச அளவில் கொரோனா பதிவாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு, மாநிலத்துக்குள்ளான ரயில், பஸ் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அதிக பட்ச அளவில் கொரோனா பதிவாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறைவாகவே இருந்தது. ஆனால், முற்றிலுமாக கொரோனா தடுத்து நிறுத்தப்படவில்லை. இந்த நிலையில் 4ம் கட்ட ஊரடங்கில் மிகப்பெரிய அளவில் தளர்வுகளை கர்நாடக அரசு வழங்கியது. மாநிலத்துக்குள் பஸ், ரயில் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது. தொழில் நிறுவனங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது.

corona-in-karnataka-67

இரட்டை இலக்கத்தில் உயர்ந்து கொண்டிருந்த கர்நாடகாவின் புதிய கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை ஊரடங்கு தளர்த்திய அடுத்த நாளில் மூன்று இலக்கத்துக்கு சென்றுள்ளது.
நேற்று மாலை 5 மணி முதல் இன்று பிற்பகல் 12 மணி வரையிலா காலகட்டத்தில் புதிதாக 127 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கர்நாடகாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,373 ஆக உயர்ந்துள்ளது. இதில் 802 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 530 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 41 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பு இன்னும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுவதால் மக்கள் பீதியில் உள்ளனர். அரசு உரிய தடுப்பு நடவடிக்கைகளில் இறங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.