ஊரடங்கு ஸ்பெஷல்… வாட்ஸ் அப்பில் அறிமுகமான புதிய ஸ்டிக்கர்ஸ்! 

 

ஊரடங்கு ஸ்பெஷல்… வாட்ஸ் அப்பில் அறிமுகமான புதிய ஸ்டிக்கர்ஸ்! 

ஊரடங்கால்  வேறு வழி இல்லாம வீட்டிலேயே நேரத்தைக் கழிக்கும் மக்களுக்காக  பல்வேறு சமூக வலைதளங்கள் புதிய வசதிகளை, அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அப்படி, வாட்ஸ் அப்பில், வீட்டிலேயே இணைந்திருப்போம் என்பதை வலியுறுத்தும் விதமாக புதிய ஸ்டிக்கர்கள் அறிமுகம் செய்யப்படுது.

இந்த கொரோனா வைரஸ் நெருக்கடி காலத்தில் மக்களின் உணர்ச்சிகள் என்ன, எதிர்வினைகள் என்ன என்பதைச் சொல்லும் வண்ணம் புதிய ஸ்டிக்கர் தொகுப்புகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த ஸ்டிக்கர்கள் இந்தி, அராபியம், ஜெர்மானியம், பிரெஞ்ச், இத்தாலி உள்ளிட்ட 10 மொழிகளில் கிடைக்கும் என வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

whats app sticker

உலக சுகாதார நிறுவனம் மற்றும் வாட்ஸ் அப் ஆகியவை இணைந்து இந்த ஸ்டிக்கர்களை அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சியையும் ஆர்வத்தையும் தெரிவித்துள்ள வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது கொரோனா வைரஸ் நெருக்கடி காலத்திலும், அதற்குப் பிறகும் கூட மக்கள் தங்கள் எண்ணங்களைத் தெரிவித்து இணைந்திருக்க உதவும் என்றும், இவற்றை நகைச்சுவையாக, விழிப்புணர்வாக எப்படி வேண்டுமானாலும், மொழி, வயது வித்தியாசமின்றி பயன்படுத்த முடியும் என்றும் வாட்ஸ் அப் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்த ஸ்டிக்கர்களில் கையைக் கழுவுதல், சமூக விலகல், உடற்பயிற்சி, மருத்துவர்களைக் கொண்டாடுதல் உள்ளிட்ட 21 தத்ரூபமான புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.