ஊரடங்கு விளைவு: சுடுகாட்டில் கொட்டப்பட்ட அழுகிய வாழைப்பழங்கள் – புலம்பெயர்ந்தோர் அதை சாப்பிடும் அவலம்

 

ஊரடங்கு விளைவு: சுடுகாட்டில் கொட்டப்பட்ட அழுகிய வாழைப்பழங்கள் – புலம்பெயர்ந்தோர் அதை சாப்பிடும் அவலம்

சுடுகாட்டில் கொட்டப்பட்ட அழுகிய வாழைப்பழங்களை புலம்பெயர்ந்தோர் உண்ணும் அவலம் டெல்லியில் நடந்துள்ளது.

டெல்லி: சுடுகாட்டில் கொட்டப்பட்ட அழுகிய வாழைப்பழங்களை புலம்பெயர்ந்தோர் உண்ணும் அவலம் டெல்லியில் நடந்துள்ளது.

டெல்லியில் யமுனா ஆற்றின் கரையில் புதன்கிழமை பிற்பகல் வெயிலில் கொட்டப்பட்ட அழுகிய வாழைப்பழங்கள் ஒரு குழுவினருக்கு எதிர்பாராத விருந்தாக  அமைந்தது. குப்பையில் வீசப்பட்ட அந்த வாழைப்பழங்களில் அவற்றில் நல்ல பழங்களாக பொறுக்கி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சாப்பிட்டனர். நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு இவ்வாறு புலம்பெயர்ந்த தொழிலாளர்களை வறுமையின் விளிம்பு நிலைக்கு கொண்டு சென்றுள்ளது.

நாட்டின் தலைநகரின் முக்கிய தகன மைதானங்களில் ஒன்றான நிகாம்போத் காட் அருகே அழுகிய வாழைப்பழங்கள் குப்பையில் வீசப்பட்டன. மேலும் இறந்தவர்களுக்கான சடங்குகளில் பயன்படுத்தப்பட்ட வாழைப்பழங்களும் கூட அவற்றில் உண்டு. அதில் உண்ணக் கூடிய அளவில் இருக்கும் பழங்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பசியை போக்குகிறது.

ttn

இது ஒரு வாழைப்பழம் … வழக்கமாக இவை எளிதில் மோசமாகப் போவதில்லை. நாங்கள் நன்றாகத் தேர்ந்தெடுத்தால், அவை எங்களுக்கு சிறிது நேரம் நீடிக்கும்” என்று ஒருவர் பை நிறைய வாழைப்பழங்களை அடைத்துக் கொண்டார்.

உத்தரபிரதேசத்தில் அலிகரில் இருந்து குடியேறிய ஒருவர், “நாங்கள் தவறாமல் உணவு பெறுவதில்லை, எனவே இந்த பழங்களை எடுத்துக் கொள்வது நல்லது” என்றார்.

இது வழக்கமாக நடப்பதில்லை என்றாலும், இந்த ஊரடங்கு நாட்களில் இங்கு அடிக்கடி வரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இங்கேயே திறந்த வெளியில் தூங்குகின்றனர்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க திடீரென நாடு தழுவிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் அதனால் சிக்கி டெல்லியில் ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர் யமுனா அருகே வடக்கு டெல்லியில் உள்ள இந்த பேட்சில் தங்கியுள்ளனர்.

நாடு முழுவதிலும் உள்ள பலரைப் போலவே அவர்கள் ஒரே இரவில் வேலை இழந்தனர். உணவு மற்றும் தங்குமிடம் இல்லாமல் அவதியுற்று வருகின்றனர். அனைத்து பொதுப் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டதால் அவர்களால் தங்கள் வீட்டிற்கு செல்ல முடியவில்லை.

புலம்பெயர்ந்தோரின் கூட்டங்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு ஒரு நீண்ட நடைப்பயணத்தைத் தொடங்கினர். ஆனால் அவர்களுக்கு தொற்றுநோய் விரைவாகப் பரவ வாய்ப்புள்ளதால் மாநில அரசாங்கங்கள் அவர்களைத் தடுத்து தங்குமிடங்களில் வைத்தனர்.