ஊரடங்கு விளைவு – அயோத்தியில் பசியால் மனிதர்களை கடிக்கும் குரங்குகள்

 

ஊரடங்கு விளைவு – அயோத்தியில் பசியால் மனிதர்களை கடிக்கும் குரங்குகள்

ஊரடங்கு காரணமாக பசியால் தவிக்கும் குரங்குகள் மனிதர்களை கடிக்க தொடங்கியுள்ளன.

அயோத்தியா: ஊரடங்கு காரணமாக பசியால் தவிக்கும் குரங்குகள் மனிதர்களை கடிக்க தொடங்கியுள்ளன.

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கும் இந்த நாட்களில் அயோத்தியில் உள்ள குரங்குகளுக்கு பசியால் கோபம் அதிகரித்துள்ளது. புனித நகரமான இங்கு ஊரடங்கு காரணமாக சுற்றுலாப் பயணிகள் இல்லாததால் குரங்குகளுக்கு உணவளிக்க யாரும் இல்லை. அதனால் பசியால் கோபத்துடன் காணப்படும் குரங்குகள் கடந்த 24 மணி நேரத்தில் 39 பேரை தாக்கி கடித்துள்ளன.

Monkeys

குரங்குகளால் கடித்த 39 பேர் மருத்துவமனைக்கு வந்துள்ளதாக ஸ்ரீ ராம் மருத்துவமனையின் மருத்துவர் அனில் குமார் தெரிவித்தார். “சில மணி நேரங்களில் நான் கண்ட மிக உயர்ந்த எண்ணிக்கை இது” என்று அவர் கூறினார். அயோத்தியில் சுமார் 7,000 முதல் 8,000 குரங்குகள் இருப்பதாக ராம் லால் மிஸ்ரா என்ற அப்பகுதியை சேர்ந்த குடியிருப்பாளர் கூறுகிறார். இதனால் குரங்குகள் கடித்து விடுமோ என்று அங்கு மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.