ஊரடங்கு முடியும் வரை கடன் வசூலிக்கத் தடை! – எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை

 

ஊரடங்கு முடியும் வரை கடன் வசூலிக்கத் தடை! – எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை

தனியார் வங்கிகள், சிறிய நிதி நிறுவனங்கள் சுய உதவி குழுக்கள் ஆகியவை தினசரி/வராந்திர/ மாதவட்டி மற்றும் அசலை வசூல் செய்கின்றன. தற்போது ஊரடங்கு உத்தரவினால் யாரும் வேலைக்கு செல்ல இயலாததால், இது போன்ற பணவசூலை உடனடியாக மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.

ஊரடங்கு முடியும் வரை தனியார் வங்கிகள் கடன் வசூலிக்கத் தடை விதிக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள உத்தரவில், “தனியார் வங்கிகள், சிறிய நிதி நிறுவனங்கள் சுய உதவி குழுக்கள் ஆகியவை தினசரி/வராந்திர/ மாதவட்டி மற்றும் அசலை வசூல் செய்கின்றன. தற்போது ஊரடங்கு உத்தரவினால் யாரும் வேலைக்கு செல்ல இயலாததால், இது போன்ற பணவசூலை உடனடியாக மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.

private-banks-8

மற்றொரு அறிவிப்பில், “உணவகங்கள், மளிகைக் கடைகள் ஆகியவற்றில் பொருட்கள் நேரவரம்பு ஏதுமின்றி நாள் முழுவதும் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கான நேர வரம்பு ஏதும் குறைக்கப்படவில்லை” என்று கூறியுள்ளார்.