ஊரடங்கு முடியலாம்… சமூக விலகல் 2022 வரை தேவைப்படலாம்! – ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை

ஊரடங்கு முடியலாம்… சமூக விலகல் 2022 வரை தேவைப்படலாம்! – ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை

கொரோனா ஊரடங்கு விரைவில் தளர்த்தப்படலாம், ஆனால், மக்களிடையே சமூக விலகல் என்பது 2022ம் ஆண்டு வரை தேவைப்படக் கூடும் என்று ஹார்வர்டு பல்கலைக் கழகம் எச்சரக்கைவிடுத்துள்ளது.

கொரோனா ஊரடங்கு விரைவில் தளர்த்தப்படலாம், ஆனால், மக்களிடையே சமூக விலகல் என்பது 2022ம் ஆண்டு வரை தேவைப்படக் கூடும் என்று ஹார்வர்டு பல்கலைக் கழகம் எச்சரக்கைவிடுத்துள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக உலகம் முழுக்க ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட நாடுகளில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், கொரோனா பரவுதல் வேகம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் கொரோனா ஆபத்து முற்றிலும் நீங்கிவிடும் என்று கூறுவதற்கு இல்லை என்று மருத்துவர்கள் எச்சரக்கைவிடுத்துள்ளனர்.

social-distancing-785

இது தொடர்பாக ஹார்வர்டு பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ள தகவலில், “முறையான சிகிச்சை முறைகளோ, தடுப்பூசியோ உருவாக்கப்படும் வரை கொரோனாவுக்கு எதிரான சமூக விலகல் நடைமுறைகள் அவசியம். கொரோனா பரவுதல் உள்ள இடங்களில் ஊரடங்கு, மக்கள் வீட்டைவிட்டு வெளியே வரத் தடை போன்றவை அவசியம் நடைமுறைப்படுத்த வேண்டும். தற்போதைய சூழலில் 2022ம் ஆண்டு வரை சமூக விலகல் கடைப்பிடிப்பது கட்டாயம். 
கொரோனா தொற்று ஏற்பட்ட நபருக்கு உடலில் கொரோனா கிருமிக்கு எதிராக உருவான எதிர்ப்பு சக்தி எவ்வளவு காலத்துக்கு நிலைத்திருக்கிறது, மீண்டும் கொரோனா தொற்று ஏற்படாமல் அவர்களைக் காக்கிறதா என்று எல்லாம் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது” என்று கூறியுள்ளது.