ஊரடங்கு முடிந்தால் தான் பேருந்துகள் இயக்கம்.. பின்பற்ற வேண்டிய நடைமுறை என்ன? முழு விவரம் உள்ளே!

 

ஊரடங்கு முடிந்தால் தான் பேருந்துகள் இயக்கம்.. பின்பற்ற வேண்டிய நடைமுறை என்ன? முழு விவரம் உள்ளே!

போக்குவரத்து செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறார். 

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக மூன்றாவது முறையாக ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. அதனால் பொது போக்குவரத்து சேவை அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து சேவை தொடங்கினால் கொரோனா வைரஸ் பாதிப்பு இன்னும் அதிகமாகும் என்பதால் இன்னும் போக்குவரத்து சேவை துவக்கப்படாமல் இருக்கிறது. இந்நிலையில் பொது முடக்கம் முடிந்த பின்னர் பேருந்துகளை இயக்கும் போது என்னென்ன விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பது குறித்து போக்குவரத்து செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறார். 

tttn

அதில், ஊரடங்கு முடிந்த பின்னர் 50% பயணிகளுடன் பேருந்துகள் இயங்க வேண்டும் என்றும் பயணிகள் இருக்கையில் அமர மார்க் செய்ய வேண்டும் என்றும் பயணிகள் நின்ற படி பயணித்தால் கட்டாயம் 6 மீ இடைவெளியுடன் நிற்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

ttn

தொடர்ந்து, ஓட்டுனர்களுக்கும் நடத்துனர்களுக்கும் மாஸ்க், கிருமி நாசினி வழங்கப்படும் என்றும் பயணிகள் பேருந்தில் ஏறுவதற்கு முன் காய்ச்சல் இருக்கிறதா என்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் பேருந்தின் ஜன்னல், கதவுகள் திறந்து தான் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். 

ttn

மேலும், பயணிகள் பேருந்தில் ஏறும் போது மாஸ்க் இருந்தால் தான் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ள அவர் முடிந்த வரை டிக்கெட்டை தவிர்த்து  E- pay, Google pay மூலம் கட்டணம் செலுத்தலாம் என்றும்  மாதாந்திர பாஸ் அட்டை பயன்படுத்தலாம் என்றும் பொது முடக்கம் முடிந்த பிறகே பேருந்து இயக்கும் போது இந்த விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். 

ttn