ஊரடங்கு மீண்டும் நீட்டிப்பு.. ரயில்களில் முன்பதிவு செய்தவர்களின் நிலை?: ரயில்வேத்துறை விளக்கம்!

 

ஊரடங்கு மீண்டும் நீட்டிப்பு.. ரயில்களில் முன்பதிவு செய்தவர்களின் நிலை?: ரயில்வேத்துறை விளக்கம்!

நாடு முழுவதும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக நேற்று பிரதமர் அறிவித்தார். 
 

கொரோனா வைரஸ் அதிகமாக பரவும் அபாய கட்டத்தில் இந்தியா இருப்பதால் மக்களை அதிலிருந்து காக்க, கடந்த வாரம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனால் மக்கள் அவரவர் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். இதனால் அனைத்து மாநிலங்களுக்கு இடையேயான ரயில்களும் பேருந்துகளும் ரத்து செய்யப்பட்டன. கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வந்ததால், நாடு முழுவதும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக நேற்று பிரதமர் அறிவித்தார். 

ttn

 14 ஆம் தேதி ஊரடங்கு முடியும் என்பதால் 15ஆம் தேதி முதல் ரயில் நேரில் முன் பதிவு தொடங்கும் என்றும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டால், முன்பதிவுகள் அதற்கு ஏற்றாற்போல மாற்றியமைக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். ஆனால் ஆன்லைன் முன்பதிவுகள் நடைபெற்று வந்தன. தற்போது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் ரயில்கள் இயங்காது என்ற நிலையில், முன்பதிவு செய்தவர்களின் பணம் திருப்பி தரப்படும் என்றும் அவர்கள் தங்களின் முன்பதிவு டிக்கெட்டுக்களை ரத்து செய்ய தேவையில்லை என்று  ரயில்வேத் துறை தெரிவித்துள்ளது.