ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு இல்லை… ஊரடங்கு முடிந்ததும் நிலுவையில் உள்ள பள்ளி, கல்லூரி தேர்வுகளை நடத்த திட்டம்- மத்திய அரசு

ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு இல்லை… ஊரடங்கு முடிந்ததும் நிலுவையில் உள்ள பள்ளி, கல்லூரி தேர்வுகளை நடத்த திட்டம்- மத்திய அரசு

கொரோனா பாதிப்பை பொறுத்து ஏப். 14க்கு பிறகு பள்ளி, கல்லூரிகளை திறப்பது பற்றி மத்திய அரசு முடிவெடுக்கும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். 

கொரோனா பாதிப்பை பொறுத்து ஏப். 14க்கு பிறகு பள்ளி, கல்லூரிகளை திறப்பது பற்றி மத்திய அரசு முடிவெடுக்கும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். 

Ramesh Pokhriyal

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ராமேஷ் பொக்ரியால் பிடிஐ நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “நாட்டில் 34 கோடி மாணவர்கள் உள்ளனர், இது அமெரிக்காவின் மக்கள் தொகையை விட அதிகம். எனவே மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பு அரசுக்குமிக முக்கியம். ஊரடங்கு முடிந்ததும் பள்ளி, கல்லூரியில் நிலுவையில் உள்ள தேர்வுகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் கல்வி கற்பதில் பாதிப்பு ஏற்படாமலிருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. ஊரடங்கு 14 ஆம் தேதியுடன் நிறைவடைகின்றன. ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை” என தெரிவித்தார்.