ஊரடங்கு சமயத்தில் 269 லட்சம் பேர் தரவிறக்கம் செய்த ஆப் இதுதானாம்!

 

ஊரடங்கு சமயத்தில்  269 லட்சம் பேர் தரவிறக்கம்  செய்த ஆப் இதுதானாம்!

இதனால் பல்வேறு நிறுவனங்கள் முடங்கியுள்ளது.  எனவே ஊழியர்கள் வீடுகளில் இருந்தவாறே பணிசெய்து வருகிறார்கள். 

உலகமே தற்போது பேச கூடிய ஒரே பெயர் கொரோனா. உலக நாடுகளை கதிகலங்க வைத்துள்ள இந்த வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போகிறது. இதனால் பல்வேறு நிறுவனங்கள் முடங்கியுள்ளது.  எனவே ஊழியர்கள் வீடுகளில் இருந்தவாறே பணிசெய்து வருகிறார்கள். 

ttn

இந்தச்சூழலில் மக்கள் அதிகம் பயன்படுத்தும், தரவிறக்கம் செய்த செயலி குறித்த ஆய்வில்  வீடியோ கான்ஃபரன்ஸிங் செயலிகளைத்தான் அதிகம் தேர்வு செய்துள்ளது தெரியவந்துள்ளது.  அதில் ஜூம் (zoom), ஸ்கைப் (Skype), ஹவுஸ்பார்ட்டி (House party) என்ற மூன்று செயலிகளே முன்னிலையில் உள்ளது. 
ப்ரியோரி என்ற ஆய்வு நிறுவனத்தின் ஆய்வின் படி, ஜனவரி மாதத்தில் 21 லட்சம், மார்ச் மாதத்தில், 27 கோடி முறை என இந்த செயலிகள் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளன.

ttn

மார்ச் மாதம் 269 லட்சம் பேர் தரவிறக்கம் செய்ததால் வீடியோ கான்ஃபரன்ஸிங் செயலிகளின் பட்டியலில் ஜூம் (zoom) செயலி முதலிடத்தில் உள்ளது.   62 லட்சம் பேர் தரவிறக்கம் செய்ததால் இரண்டாவது இடத்தில் இருக்கும் ஸ்கைப் ஆப்பும்,  ஹவுஸ் பார்ட்டி செயலியை 52 லட்சம் பேர் தரவிறக்கம் செய்ததால் அது மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது. 

y

இருப்பினும் ஒவ்வொரு நாளும் தொடர்ச்சியாகப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையில்  ஸ்கைப் 
 முதலிடமும்,  ஜூம் ஆப் இரண்டாவது இடமும்,  ஹவுஸ் பார்ட்டி ஆப் மூன்றாவது இடத்திலும் உள்ளது.