ஊரடங்கு குறித்து சென்னை, கோவை, மதுரை மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு!

 

ஊரடங்கு குறித்து சென்னை, கோவை, மதுரை மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு!

இன்றோடு ஊரடங்கு கடுமையாக்கப்படுவது நிறைவடைவதால் அதனை பற்றிய ஓர் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிதீவிரமாக பரவி வருவதால் தமிழக அரசு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கொரோனா வைரஸை கட்டுப்படுத்த சென்னை, கோவை, மதுரை ஆகிய மாநகராட்சிகளில் கடந்த 26 ஆம் தேதி முதல் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டது. கடந்த 4 நாட்களாக அத்தியாவசிய தேவைகளுக்கு கூட மக்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. இன்றோடு ஊரடங்கு கடுமையாக்கப்படுவது நிறைவடைவதால் அதனை பற்றிய ஓர் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

ttn

இது குறித்து செய்தி மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ” சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய மூன்று மாநகராட்சி பகுதிகளில் இன்று இரவு வரை அமலில் இருக்கும் முழு ஊரடங்கு முடியும் நிலையில், நாளை முதல் 26.4.2020 க்கு முன்பு இருந்த நிலைப்படி ஊரடங்கு தொடரும். எனினும் 30.4.2010 அன்று மட்டும் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களான காய்கறி,பழங்கள் மற்றும் மளிகை பொருட்களை வாங்குவதற்கு ஏதுவாக காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை அத்தியாவசிய பொருட்களை விற்கும் கடைகள் திறந்திருக்க அனுமதிக்கப்படும்.

ttn

1.5.2020 முதல் மேற்கண்ட அத்தியாவசிய பொருட்களை விற்கும் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே திறந்திருக்க அனுமதிக்கப்படும். கொரோனா வைரஸ் நோய் தொற்று ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு எளிதாகவும் தீவிரமாகவும் பரவும் தன்மையுள்ள கடும் நோய்த்தொற்று என்பதால் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க அவசரம் காட்டாமல்,நிதானமாக பொறுமை காத்து சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைப்பிடித்து முக கவசம் அணிந்து கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.