ஊரடங்கு காலத்தில் போதைப்பொருட்களை படிப்படியாக கைவிடும் இந்தியர்கள் !! யோகா, தியானம் கைகொடுப்பதாக நெகிழ்ச்சி !!

ஊரடங்கு காலத்தில் போதைப்பொருட்களை படிப்படியாக கைவிடும் இந்தியர்கள் !! யோகா, தியானம் கைகொடுப்பதாக நெகிழ்ச்சி !!

ஊரடங்கு காலத்தில் இந்தியாவில் 18-24 வயதுக்குட்பட்ட இளைஞர்கள்  72 சதவீதம் பேர் புகைபிடிப்பதை விட்டுவிட முயன்றுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. 25-39 வயதுக்குட்பட்ட இந்தியர்களில் 69 சதவீதம் பேர் புகையிலைப் பழக்கத்தை விட்டு விட முடிவு செய்துள்ளதாகவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இந்த ஊரடங்கு காலத்தில் 18 முதல் 69 வயதுக்குட்பட்டோரில் 66 சதவீதம் பேர் உடல்நலக் குறைவு ஏற்படுவதால் புகைபிடிப்பதை விட்டுவிட விருப்பம் தெரிவித்துள்ளனர். 

இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி மற்றும் தென்னாப்பிரிக்கா நாடுகளில் மொத்தம் 6,801 புகையிலை மற்றும் நிகோடின் பயன்படுத்துபவர்கள் ஏப்ரல் 4 ஆம் தேதி தொடங்கி 2020 ஏப்ரல் 14 ஆம் தேதியுடன் முடிவடைந்த ஊரடங்கின்போது பேட்டி காணப்பட்டனர்.

druggs-789

இந்தியாவில், ஆய்வு செய்யப்பட்ட 1,500 புகைப்பிடிப்பவர்களில் மூன்றில் இரண்டு பங்கு சுகாதார காரணங்களுக்காக புகைபிடிப்பதை விட்டுவிடுவதற்கான விருப்பத்தை வெளிப்படுத்தியது. 66 சதவிகிதத்தினர் தாங்கள் விலகுவதாகக் கருதுவதாகக் குறிப்பிட்டுள்ள நிலையில், 63 சதவீதம் பேர் உண்மையில் விலகுவதற்கான முயற்சியை மேற்கொண்டதாக COVID -19 ஸ்டேட் ஆஃப் ஸ்மோக்கிங் போல் என்ற ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 72% புகையிலை பயனர்கள் ஊரடங்கின்போது அதில் இருந்து மீள முடிவு செய்துள்ளனர் என்கிறது கணக்கெடுப்பு. சமூக இடைவெளி பரந்த அளவிலான எதிர்மறை மனநல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது, கணிசமான எண்ணிக்கையிலான பதிலளித்தவர்கள் தங்கள் மன ஆரோக்கியத்தில் மோசமான விளைவை சந்திப்பதாக தெரிவித்துள்ளனர். (இந்தியா: 36 சதவீதம்; அமெரிக்கா: 42 சதவீதம்; இங்கிலாந்து: 39 சதவீதம்; இத்தாலி. : 24 சதவீதம்; தென்னாப்பிரிக்கா: 24 சதவீதம்).

yoga-99

இந்தியாவில் புகையிலை மற்றும் நிகோடின் பயன்படுத்துபவர்கள் அந்த பழக்கதில் இருந்து விடுபட ஆரோக்கியமாக சமாளிக்கும் வழிமுறைகளை பின்பற்றி உள்ளனர். அதாவது உடல் உடற்பயிற்சி, 64 சதவீதம்; சுவாச பயிற்சிகள், 58 சதவீதம்; தியானம், 58 சதவீதம்; யோகா, 55 சதவீதம் செய்துள்ளனர்.