ஊரடங்கு எதிரொலி; சாலையிலிருந்த பாலை நாய்களுடன் அருந்தும் மனிதர்!

ஊரடங்கு எதிரொலி; சாலையிலிருந்த பாலை நாய்களுடன் அருந்தும் மனிதர்!

உத்தர பிரதேசத்தில் சாலையில் கொட்டிக்கிடந்த பாலை தெரு நாய்களுடன் மனிதர் ஒருவர் பகிர்ந்துகொண்ட காட்சிகள் காண்போரை கண்கலங்க வைக்கின்றன.  

உத்தர பிரதேசத்தில் சாலையில் கொட்டிக்கிடந்த பாலை தெரு நாய்களுடன் மனிதர் ஒருவர் பகிர்ந்துகொண்ட காட்சிகள் காண்போரை கண்கலங்க வைக்கின்றன.  

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சாலையோரமிருக்கும் ஆதரவற்றோர்கள், புலம்பெயர்ந்தவர்கள், தினக்கூலிகள் மற்றும் ஏழைகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

milk on the road

இந்நிலையில் ஆக்ரா அருகே ராம் பாஹ் சவுரஹா என்ற பகுதியில் பால் கொண்டு சென்ற வாகனம் விபத்துக்குள்ளானதில் பால் முழுவதும் சாலையில் கொட்டியது. ஆறாக ஓடிய இந்த பாலை கண்டதும் அங்கிருந்த நாய்கள் அதனை சுவைத்துக்கொண்டிருந்தன. அதேசமயம் அந்த வழியாக வந்த நபர் ஒருவர், தான் வைத்திருந்த ஒரு சிறிய பாத்திரத்தில் சிந்திகிடந்த பாலை கைகளால் அள்ளி ஊற்றுகிறார். ஊரடங்கின் எதிரொலி என இந்த காட்சிகள் இணையத்தில் கவனம் பெற்றுவருகின்றன