ஊரடங்கு எதிரொலி: அமேசான் பிரைமிடம் “பொன்மகள் வந்தாள்” திரைப்படத்தை விற்ற சூர்யா!

 

ஊரடங்கு எதிரொலி: அமேசான் பிரைமிடம் “பொன்மகள் வந்தாள்” திரைப்படத்தை விற்ற சூர்யா!

ஜோதிகா தனது திருமணத்திற்கு பிறகு நடிப்பில் இருந்து ஒதுங்கி இருந்தார். அதன் பிறகு 36 வயதினிலே என்ற படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் கால்பதித்தார். இப்படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து ராட்சசி, ஜாக்பாட், தம்பி ஆகிய படங்களில் நடித்தார். 

ஜோதிகா தனது திருமணத்திற்கு பிறகு நடிப்பில் இருந்து ஒதுங்கி இருந்தார். அதன் பிறகு 36 வயதினிலே என்ற படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் கால்பதித்தார். இப்படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து ராட்சசி, ஜாக்பாட், தம்பி ஆகிய படங்களில் நடித்தார். தற்போது அறிமுக இயக்குநர் ஜேஜே ஃப்ரெட்ரிக் இயக்கத்தில், பொன்மகள் வந்தாள் என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தை ராஜசேகர் பாண்டியன் மற்றும் சூர்யா ஆகியோர் 2டி எண்டெர்டெய்ன்மெண்ட் சார்பில் தயாரிக்கின்றனர். இப்படத்தில் பார்த்திபன், பாக்யராஜ், பிரதாப் போத்தன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். கோவிந்த் வசந்தா இசையில் உருவாகிவரும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் ஜோதிகா வழக்கறிஞர் வேடத்தில் நடிப்பதாக தெரிகிறது. இப்படம் மார்ச் 28 ஆம் தேதி ரிலீஸ் ஆகவிருந்தநிலையில் ஊரடங்கு உத்தரவால் வெளியாகவில்லை. 

பொன்மகள் வந்தாள்
 
இந்நிலையில், இந்த படத்தை சூர்யா திரையரங்கிற்கு கொண்டு வரமால் நேரடியாக டிஜிட்டல் மார்க்கெட்டில் இரு மடங்கு லாபத்திற்கு விற்றுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது பொன்மகள் வந்தாள் படத்தை அமேசான் ப்ரைம் இந்த படத்தை 9 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதாவது பட்ஜெட்டை விட டபுள் மடங்கிற்கு லாபம் பார்த்துள்ளது. கொரோனா வைரஸால் ஊரே முடங்கிகிடக்கும் வேலையில் இதேபோல் பல தயாரிப்பாளர்கள் டிஜிட்டல் தளங்களுக்கு படங்களை கொடுக்க முன் வந்திருகின்றனர். இதனால் திரையரங்கு மற்றும் விநியோகஸ்தகரின் வருவாய் பாதிக்கப்படுவது மட்டுமின்றி, திரையரங்குகளை மட்டுமே நம்பி வாழ்க்கை நடத்தும் பல குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.