ஊரடங்கு உத்தரவை மீறி டாஸ்மாக் கடையை திறந்து மது விற்பனை செய்த ஊழியர் மீது வழக்குப்பதிவு!

 

ஊரடங்கு உத்தரவை மீறி டாஸ்மாக் கடையை திறந்து மது விற்பனை செய்த ஊழியர் மீது வழக்குப்பதிவு!

மத்திய மாநில அரசுகள் கொரோனா வைரஸ் தொற்று பரவும் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டு வருகிறது,

மத்திய மாநில அரசுகள் கொரோனா வைரஸ் தொற்று பரவும் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டு வருகிறது, மதுரை மாவட்டத்தில் இந்த ஊரடங்கு உத்தரவை அமல்படுத்துவதற்கான மாவட்ட காவல்துறையினர் சார்பாக தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது மேலும் இந்த உத்தரவுகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

arrested

இந்நிலையில் ஒத்தக்கடையில் விதிமீறி டாஸ்மாக் கடை திறந்து மது விற்பனையில் ஈடுபட்ட ஊழியர் கணேசன் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. லஞ்சம் பெற்றுக் கொண்டு மது விற்பனையை தடுக்காத தலைமை காவலர் கண்ணன் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தலைமை காவலர் கண்ணன் தனக்கு தேவையான மதுபானங்களை லஞ்சமாக பெற்றுக்கொண்டு மது விற்பனையை கண்டுகொள்ளாமல் சென்ற வீடியோ வெளியானதையடுத்து அவர் ஆயுதபடைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.