ஊரடங்கு உத்தரவை மீறி அரங்கேறும் திருவிழா! 

 

ஊரடங்கு உத்தரவை மீறி அரங்கேறும் திருவிழா! 

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் சுமார் 173 நாடுகளில் பரவியுள்ளது. இதுவரை 2 லட்சத்து 44ஆயிரத்து 414 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலியானோர் எண்ணிக்கை 9000 ஐ தாண்டியது.  இந்தியாவில் இந்த வைரசால் 194  பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

ttn

இதையடுத்து  கொரோனா வைரஸ் குறித்து நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, “22 ஆம் தேதி ஞாயிறு அன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம். இது மக்களுக்காக மக்களாகவே பிறப்பித்துக்கொள்ளும் ஊரடங்கு உத்தரவு” என தெரிவித்தார்.

Temple festival

இந்நிலையில் வட சென்னை இராயபுரம் சிங்கார தோட்டம் 4 ஆவது தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலிலும் சிங்கார தோட்டம் 7ஆவது தெருவில் உள்ள சின்ன சேனியம்மன் கோயிலிலும் வருகிற மக்கள் ஊரடங்கு தினமான வரும் 22ஆம் தேதி அன்று அக்கினி சட்டி திருவிழா கொடியேற்றம் நடைபெற உள்ளது. அன்றைய தினம் பல்லாயிரக்கணக்கான மக்கள் அங்கு கூடக்கூடிய வாய்ப்பு இருப்பதால் அறநிலைய துறையும் காவல் துறையும் மாற்று ஏற்பாடு செய்யும்படி பொதுமக்களிடம் கோரிக்கை வைத்துள்ளது.