ஊரடங்கு உத்தரவு மீறல்: 7 நாட்களில் 1,25,793 பேர் கைது!

 

ஊரடங்கு உத்தரவு மீறல்: 7 நாட்களில் 1,25,793 பேர் கைது!

ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் மக்களை வீட்டிலேயே இருக்குமாறு அரசு வலியுறுத்தி வருகிறது

ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் மக்களை வீட்டிலேயே இருக்குமாறு அரசு வலியுறுத்தி வருகிறது. இருப்பினும் விதியை மீறி மக்கள் வெளியே வருவதால், போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். குறிப்பாக அத்தியாவசிய தேவைகள் தவிர பிற தேவைகளுக்காக வெளியே வருபவர்கள் மீது போலீசார்வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

ttn

சில இடங்களில் கொரோனா அபாயத்தை மக்கள் உணரும் பொருட்டு தோப்புக்கரணம் உள்ளிட்ட நூதன தண்டனை வழங்கி வருகின்றனர். கடந்த வாரம் செவ்வாய் கிழமை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், இன்று 8 ஆவது நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கடந்த 7 நாட்களில் மட்டுமே 1,25,793 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மேலும், 1,08,922 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 85,850 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.