ஊரடங்கு அமலில் உள்ள நாள்வரை ரேஷன் பணியாளர்களுக்கு ரூ.200 வழங்கப்படும்!

 

ஊரடங்கு அமலில் உள்ள நாள்வரை ரேஷன் பணியாளர்களுக்கு ரூ.200 வழங்கப்படும்!

அரசி, பருப்பு, எண்ணைய் மற்றும் போன்ற அத்தியாவசிய பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 

தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும், கொரோனா நிவாரண உதவியாக ரூ. 1000 ரொக்க பணத்துடன் அரசி, பருப்பு, எண்ணைய் மற்றும் போன்ற அத்தியாவசிய பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 

tt

முதற்கட்டமாக ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்த 15-ந் தேதிவரை இப்பணியை மேற்கொண்ட  கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள ரேஷன் கடை பணியாளர்கள் அனைவருக்கும், நாளொன்றிற்கு ரூ.200 தொகையை, பயணம், மற்றும் இடைநிகழ் செலவினமாக சம்பந்தப்பட்ட சங்கங்கள் அனுமதிக்க வேண்டும் என்று அரசு ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தது.

tt

இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு மீண்டும் மே மாதம் 3 ஆம் தேதி வரை நீடிக்கும் என   மத்திய அரசு தெரிவித்துள்ளது.  இதனால் ஊரடங்கு அமலில் உள்ள நாள்வரை ரூ.200 தொகை, பயணம், மற்றும் இடைநிகழ் செலவினமாக ரேஷன் கடை பணியாளர்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு கூறியுள்ளது.