ஊரடங்குக்கு பிறகு ஹோட்டல், ஷாப்பிங் மால் ஆகிய தொழில்கள் பாதிப்பை சந்திக்கும் – ஆய்வில் தகவல்

 

ஊரடங்குக்கு பிறகு ஹோட்டல், ஷாப்பிங் மால் ஆகிய தொழில்கள் பாதிப்பை சந்திக்கும் – ஆய்வில் தகவல்

ஊரடங்குக்கு பிறகு ஹோட்டல், ஷாப்பிங் மால் ஆகிய தொழில்கள் பாதிப்பை சந்திக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

டெல்லி: ஊரடங்குக்கு பிறகு ஹோட்டல், ஷாப்பிங் மால் ஆகிய தொழில்கள் பாதிப்பை சந்திக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் 8356 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 273-ஆக அதிகரித்துள்ளது. 21 நாட்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் பல மாநிலங்களில் ஊரடங்கு ஏப்ரல் மாதம் இறுதி வரை நீடிக்கப்பட்டு உள்ளது. நாட்டில் ஊரடங்கு முடிவுக்கு வந்த பிறகு என்னென்ன துறைகள் உடனடியாக மீண்டெழும் என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

hotel

அதன்படி, ஊரடங்குக்கு பிறகு தங்கும் விடுதிகள், ஷாப்பிங் மால், சுற்றுலா, வெளிநாட்டு பயணம் ஆகிய துறைகளை சார்ந்த தொழில்கள் கடும் பாதிப்பை சந்திக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் அமேசான், பிளிப்கார்ட் போன்ற இ-காமா்ஸ் துறை, சரக்குப் போக்குவரத்து, டிஜிட்டல் பொழுதுபோக்கு, மருத்துவ மற்றும் சுகாதார உபகரணங்கள் ஆகிய துறைகள் ஊரடங்குக்கு பிறகு உடனடியாக மீண்டெழும் என்று அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.