ஊரடங்கில் முடங்கிக்கிடக்கும் இளைஞர்களை குஷிப்படுத்திய வெள்ளையானை படக்குழுவினர்!

 

ஊரடங்கில் முடங்கிக்கிடக்கும் இளைஞர்களை குஷிப்படுத்திய வெள்ளையானை படக்குழுவினர்!

விவசாயத்தையும் விவசாயிகளையும் பற்றி பேசிய ஏராளமான படங்களுக்கு மத்தியில் தற்போது புதிய அவதாரம் எடுத்துள்ளது வெள்ளையானை. தஞ்சையை பூர்விகமாகக்கொண்டதால் விவசாயத்தின்மீது தீராக்காதல் இயக்குநர் சுப்ரமணியம் சிவா விவசாயிகளின் பார்வையில் வெள்ளையானை படத்தை இயக்கியுள்ளார். சமுத்திரகனி, ஆத்மிகா,யோகிபாபு என கைக்கும் கதைக்கும் அடக்கமான நடிகர்களைக்கொண்டு உருவாகியிருக்கிறது ‘வெள்ளை யானை’ இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசைமைக்கிறார். மினி ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம்  சார்பில் S .வினோத் குமார்  தயாரிக்கிறார்.

முழுக்க முழுக்க விவசாயம் சம்மந்தப்பட்ட திரைப்படமான இந்த படத்திலிருந்து ” நெல்லு வாசம்” எனும் இரண்டாவது பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த பாடல் வரிகள், விவசாயிகளுக்கு நம்பிக்கை கொடுக்கும் விதத்தில் உள்ளது. மாற்றங்கள் நிகழும் என்பதையும் வலியுறுத்துகிறது. முன்னதாக வெண்ணிலா என்ற பாடலை தனுஷ் வெளியிட்டார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது . விரைவில் இப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.