ஊரடங்கிலும் வீட்டில(அ)டங்கா லியோனி…தனது ஊரடங்கு வாழ்க்கையை வீடியோவாக வெளியிட்ட லியோனி…!

 

ஊரடங்கிலும் வீட்டில(அ)டங்கா லியோனி…தனது ஊரடங்கு வாழ்க்கையை வீடியோவாக வெளியிட்ட லியோனி…!

கொரோனா வைரஸ் தன் திறமையை ஒரு பக்கம் காட்டிக்கொண்டிருக்க, மறுபுறம் வீட்டில் முடங்கிய மக்கள் தங்கள் திறமைகளை வெளிக்கொணர்ந்து வருகின்றனர். சினிமா பிரபலங்கள் பலரும் தாங்கள் உடற்பயிற்சி செய்வது, சமைப்பது, குழந்தைகளுடன் விளையாடுவது போன்ற காணொளிகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

கொரோனா வைரஸ் தன் திறமையை ஒரு பக்கம் காட்டிக்கொண்டிருக்க, மறுபுறம் வீட்டில் முடங்கிய மக்கள் தங்கள் திறமைகளை வெளிக்கொணர்ந்து வருகின்றனர். சினிமா பிரபலங்கள் பலரும் தாங்கள் உடற்பயிற்சி செய்வது, சமைப்பது, குழந்தைகளுடன் விளையாடுவது போன்ற காணொளிகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த  வரிசையில் பேச்சாளர் திண்டுக்கல் லியோனியும் தனது ஊரடங்கு வாழ்க்கையை வீடியோவாக பதிவு செய்து LeoniTalkies என்ற யூடுப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

leoni

நிற்பதற்கே நேரமில்லாத நான் தற்போது உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்திருக்கிறேன் என்று ஆரம்பிக்கிறார். பின்னர் செய்தித்தாள்களை வாசிக்கச் செல்கிறார். புத்தகங்கள் உள்ள அறையில் சென்று கலைஞர் எழுதிய சில புத்தகங்களை எடுத்து வாசிக்க ஆரம்பிக்கிறார். கலைஞருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்திற்குக் கீழ் இருந்து வாசிக்கும் பொழுது கலைஞரே நேரில் ஆசியளிப்பது போல் இருக்கும் என்று நெகிழ்கிறார். பின்னர் தன் பேரக்குழந்தைகளோடு விளையாடும் லியோனி அவர்களோடு சேர்ந்து பிகில் பட வெறித்தனம் பாடலையும் பாடுகிறார். பின்னர் குடும்பத்துடன் அமர்ந்து உண்ட பிறகு அனைவரும் வட்டமாக உட்கார்ந்து சீட்டு விளையாடுகின்றனர்.

 

இறுதியாக பகலில் செய்த பட்டத்தை வானத்தில் பறக்கவிடும் அலாதியில் வீடியோவை முடிக்கின்றார். இவ்வாறாக லியோனி தன் ஊரடங்கு வாழ்வை நமக்கு தெரியப் படுத்தியுள்ளார்.