ஊரடங்கிற்கு பிறகு கடைகள் எந்தெந்த கடைகள், எவ்வளவு நேரம் திறக்க வேண்டும்! வணிகர் சங்க பேரவை கோரிக்கை

 

ஊரடங்கிற்கு பிறகு கடைகள் எந்தெந்த கடைகள், எவ்வளவு நேரம் திறக்க வேண்டும்! வணிகர் சங்க பேரவை கோரிக்கை

கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கின்போது மளிகை கடை உள்ளிட்ட அத்தியாவசிய தேவை கடைகளை மதியம் 1 மணி வரை மட்டுமே திறக்க அரசு அனுமதி அளித்தது. அதன்படி மளிகை, காய்கறி கடைகளில் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. முழு ஊரடங்கில் இருந்து மருந்து கடைகள் மற்றும் மருத்துவமனைளுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. 

statement

இந்நிலையில் ஊரடங்கிற்கு பிறகு எந்தெந்த கடைகள் திறக்கப்பட வேண்டும். எத்தனை மணி நேரம் செயல்பட வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது. இதுதொடர்பான அந்த பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “அத்தியாவசியப் பொருட்களின் கடைகள், காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்க அனுமதிக்க வேண்டும், மறு முதலீட்டுக்காக வணிகர்களுக்கு வட்டி இல்லா கடனுதவி செய்தல் வேண்டும், புகைபிடிக்கத் தடையுடன் டீக்கடைகள் திறந்திருக்க அனுமதிக்க வேண்டும், ஆட்டிறைச்சி, கோழி, மீன் வணிகத்துறைக்கு நாள்தோறும் அனுமதி வேண்டும். மழை பெய்யும்போது மழை நீர் வடிகால்கள், தெருக்கள், குளங்கள், குட்டைகள் என்று பள்ளமான இடங்களில் தேங்குகிறது. இதை ஓர் அரிய வாய்ப்பாகப் பயன்படுத்தி, உள்ளாட்சியினர் தேங்கிக்கிடக்கும் மழைரீரின் மீது கொசு மருந்து மற்றும் கொடிய கொரோனா ஒழிப்பு மருந்துகளை தெளித்தால் மழைநீரால் ஊரே கழுவப்பட்டு, அதில் அடித்துவரப்பட்ட கொசு மற்றும் கொரோனாவின் உற்பத்திக் களத்தை சுலபமாக அழித்திட முடியும், மழ பெய்வதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அத்தியாவசிய பொருட்களை வீட்டிற்கே சென்று நேரில் வழங்கிட அனுமதிக்க வேண்டும். வணிகர் நல வாரியத்தில் உறுப்பினராக உள்ள வணிகர்களுக்கு ரூ,1000 உதவித்தொகை வழங்குவதை ரூ.5000 ஆக உயர்த்தி வழங்கிட வேண்டும். கொரோனா காலம் முடியும்வர சுங்க கட்டணங்கள் ரத்து செய்ய வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.