ஊரடங்கின்போது வீட்டில் இந்த 7 இசைக்கருவிகளில் ஒன்றைக் கற்றுக் கொள்ளுங்கள்

 

ஊரடங்கின்போது வீட்டில் இந்த 7 இசைக்கருவிகளில் ஒன்றைக் கற்றுக் கொள்ளுங்கள்

இந்த ஊரடங்கு நேரத்தை வேறு சில வழிகளில் பயனுள்ளதாக கழிக்கலாம். அதில் ஒன்று தான் ஏதாவது ஒரு இசைக் கருவியை வாசிக்க கற்றுக் கொள்வது!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் நாடு முழுக்க கடந்த 2 மாதங்களாக மக்கள் சோர்வாக, போரடித்துக் கொண்டு இருக்கிறார்கள். லேப்டாப்பில் வேலை செய்வது, டிவி பார்ப்பது, கேம் விளையாடுவது போன்ற செயல்களையே மாற்றி மாற்றி செய்து கொண்டிருக்கின்றனர்.

இந்த ஊரடங்கு நேரத்தை வேறு சில வழிகளில் பயனுள்ளதாக கழிக்கலாம். அதில் ஒன்று தான் ஏதாவது ஒரு இசைக் கருவியை வாசிக்க கற்றுக் கொள்வது!

ஒரு இசைக் கருவியைக் கற்றுக் கொள்வதன் மூலம் அறிவாற்றல் திறன் மேம்படுகிறது. வாழ்நாள் முழுவதும் நம்முடன் இருக்கும் ஒரு திறமையாகவும் இது அமையும். ஊரடங்கு நேரத்தில் வீட்டில் இருக்கும்போது, கீழ்க்கண்ட இந்த இசைக் கருவிகளைக் கற்றுக் கொள்ள முயற்சி செய்து பாருங்கள்!

ttn

பேஸ் கிட்டார்:

பேஸ் கிட்டாரில் 4 ஸ்ட்ரிங்ஸ் மட்டுமே இருக்கும். அதனால் இதை வாசிக்க கற்றுக் கொள்வது என்பது மற்ற இசைக் கருவிகளுடன் ஒப்பிடுகையில் சற்றே எளிது தான். யூடியூப் அல்லது மொபைல் ஆப் மூலமாக பேஸ் கிட்டாரை வாசிக்க கற்றுக் கொள்ளலாம்.

ttn

யுகுலேலே:

சிறிய ரக கிட்டார் போல கையடக்கமாக இருக்கும் இந்த கருவியை எங்கும் எளிதில் எடுத்துச் செல்லலாம். கிட்டார் போலவே இதன் இசையமைப்பும் ஸ்ட்ரிங்ஸை அடிப்படையாக கொண்டு இயங்குகிறது.

ttn

ஹார்மோனிகா:

ஹார்மோனிகா என்பது வேறொன்றும் இல்லை. படையப்பா படத்தில் அடிக்கடி ரஜினி வாயில் வைத்து ஒரு கருவி கொண்டு வாசிப்பாரே. அதுதான். அதாவது நமக்கு தெரிந்த பாஷையில் மவுத் ஆர்கன். இசை பற்றி கொஞ்சம்கூட அறியாத, முதன்முறையாக இசைக் கருவி வாசிக்க முயற்சி செய்பவர்களுக்கு ஹார்மோனிகா ஒரு சிறந்த தேர்வாகும். ஏனெனில் வாய் காற்று மூலம் எளிதாக ஒலிக்க செய்து ஹார்மோனிகா மூலம் இசையை உருவாக்கலாம்.

ttn

ரெக்கார்டர்

இதுவும் வாயில் வைத்து ஊதக் கூடிய இசைக் கருவிதான். பார்ப்பதற்கு கிட்டத்தட்ட குட்டி சைஸ் நாதஸ்வரம் போல இருக்கும். இதில் இருக்கும் ஓட்டைகளை விரல்களால் வித,விதமாக அடைத்து வாசிப்பதன் மூலம் வித்தியாசமான ஒலிகளை இசையாக உருவாக்க முடியும்.

ttn

பியானோ:

இசைக் கருவி கற்றுக் கொள்ள விரும்புபவர்களின் முதல் சாய்ஸாக பெரும்பாலும் பியானோவாகவே இருக்கும். இதை கற்றுக் கொள்ள இன்டர்நெட்டில் எக்கச்சக்கமான இசைப் பாடங்கள் இலவசமாக கொட்டிக் கிடக்கின்றன.

ttn

ஃபிடில்:

பார்ப்பதற்கு அப்படியே வயலின் போல இருந்தாலும் இந்த ஃபிடில் என்பது வேறு என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கருவியையும் எளிதில் வாசிக்க கற்றுக் கொள்ளலாம்.

ttn

ட்ரம்ஸ்:

உற்சாகமான மனநிலை கொண்ட ஆட்டம் போட வைக்கும் இசையில் ட்ரம்ஸ் இசைக் கருவியின் பங்கு பெருமளவில் இருக்கும். இந்த இசைக் கருவியை கற்றுக் கொள்வதால் நம்மிடம் உற்சாகம் எப்போதும் கரை புரண்டோடும்!