ஊரடங்கின்போது நடைபெற்ற குழந்தைத் திருமணம் ! பல கிராமங்களுக்கு சீல் வைத்த போலீஸ் !!

 

ஊரடங்கின்போது நடைபெற்ற குழந்தைத் திருமணம் ! பல கிராமங்களுக்கு சீல் வைத்த போலீஸ் !!

ராஜஸ்தான் மாநிலத்தில் மேற்கொண்ட கொரோனா பரிசோதனையின்போது புதிதாக திருமணம் ஆன தம்பதிக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்

ராஜஸ்தான் மாநிலத்தில் மேற்கொண்ட கொரோனா பரிசோதனையின்போது புதிதாக திருமணம் ஆன தம்பதிக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். மேலும் அவர்கள் வசிக்கும் கிராமத்திற்கும் அவர்கள் திருமணத்திற்கு வந்தவர்கள் வசிக்கும் கிராமத்திற்கும் சீல வைக்கப்பட்டது. அதாவது ஆல்வார் மாவட்டம் கிருஷ்ணகார் தாலுகாவுக்குட்பட்ட கிராமங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. 
சமீபத்தில் டெல்லிக்கு காய்கறி கொண்டு சென்ற வாகனத்தை பரிசோதனை செய்தபோது அதில் புதுமண தம்பதி சென்று கொண்டிருந்தார். அவரை பரிசோதனை செய்ததில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் திருமணம் செய்து கொண்ட பெண்ணுக்கும் கொரோனா இருப்பது தெரியவந்ததை அடுத்து அவர்கள் வசிக்கும் கிராமங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டன. 
மேலும் அந்த நபர் மைனர் பெண்ணை திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்துள்ளது. அதாவது இந்த ஊரடங்கின்போது 2 குழந்தை திருமணம் நடைபெற்றுள்ளது. 2 திருமணங்களுமே மைனர் பெண்ணை திருமணம் செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
“இரண்டு திருமணங்களும் பெரிய விருந்து வைத்து ஆயிரக்கணக்கான பொதுமக்களுடன் நடத்தப்பட்டன என்பது அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து அனைத்து கிராம மக்களும் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர். இதையடுத்து மணமக்கள் மற்றும் கிராமங்களின் எல்லைகள் சீல் வைக்கப்பட்டன. மேலும் குழந்தைத் திருமணம் செய்ததாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரித்து வருகின்றனர்.