ஊரடங்கால் 2வது மனைவி வீட்டில் சிக்கிய கணவர் !! காவல்நிலையத்திற்கு சென்ற சக்களத்தி சண்டை !!

 

ஊரடங்கால் 2வது மனைவி வீட்டில் சிக்கிய கணவர் !! காவல்நிலையத்திற்கு சென்ற சக்களத்தி சண்டை !!

கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவில் உள்ள பகுதியில் 45 வயது நபருக்கு 2 மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி மற்றும் 2வது மனைவி வீட்டிலும் பிரச்சனை வராத வண்ணம் சமமாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் கொரோனா அச்சம் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், அந்த நபர் தனது இரண்டாவது மனைவியின் வீட்டில் சிக்கிக்கொண்டார்

பெங்களூரில் இரு மனைவிகளிடம் சமமாக நேரத்தை செலவிட்டு வந்த கணவர் ஊரடங்கால் 2வது மனைவி வீட்டில் சிக்கிக்கொண்டதால் கணவர் ஓரவஞ்சனை செய்ததாக முதல் மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார். 

கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவில் உள்ள பகுதியில் 45 வயது நபருக்கு 2 மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி மற்றும் 2வது மனைவி வீட்டிலும் பிரச்சனை வராத வண்ணம் சமமாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் கொரோனா அச்சம் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், அந்த நபர் தனது இரண்டாவது மனைவியின் வீட்டில் சிக்கிக்கொண்டார், அவரது முதல் மனைவியின் இல்லத்திற்கு செல்ல முடியவில்லை. இந்நிலையில் முதல் மனைவி பெங்களூரு காவல்துறையின் பெண்களின் உதவி மைய எண்ணை அணுகியுள்ளார். அதில் தனது கணவர் 2வது மனைவியின் வீட்டிலேயே இருப்பதாகவும் அவர் என்னுடைய வீட்டிற்கு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். 

women-fghting

இதுகுறித்து ஒரு பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் சம்பந்தப்பட்ட நபர் முதலில் ஒரு பெண்ணை மணந்தார். இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது. பின்னர் 10 வருடம் கழித்து வேறு ஒரு பெண்ணுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த விஷயம் முதல் மனைவிக்கு தெரியவர முறையற்ற வாழ்வு வாழ்ந்து வந்த பெண்ணையும் திருமணம் செய்து கொண்டு முறையான வாழ்க்கை வாழத் தொடங்கினார். இதையடுத்து மனைவிகளுக்கும் தனது நேரத்தை மிகவும் சமமாக பகிர்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில் 2வது மனைவி வீட்டில் வசிக்கும்போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் அங்கேயே மாட்டிக்கொண்டார். இதனால் ஆத்திரம் அடைந்த முதல் மனைவி தன்னுடைய வீட்டிற்கு கணவர் வருவது இல்லை என போலீசுக்கு புகார் அளித்துவிட்டார். பின்னர் ஒரு கணவர் 2 மனைவிகள் பஞ்சாயத்தை பேசித் தீர்த்த போலீசார் ஊரடங்கு முடிந்த பின்னர் கண்டிப்பாக 2 மனைவிகளுடனும் கணவர் நேரத்தை செலவிடுவார் என சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர்.