ஊரடங்கால் வேலையிழப்பு! குடிக்க பணம் தேவை… ஆடு,மாடுகளை திருடும் மர்ம கும்பல்!!

 

ஊரடங்கால் வேலையிழப்பு! குடிக்க பணம் தேவை… ஆடு,மாடுகளை திருடும் மர்ம கும்பல்!!

மது குடிக்க பணம் தேவைப்பட்டதால் பக்கத்திலுள்ள தோட்டத்தில் கட்டி இருந்த பசு மாடுகளை திருடி விற்ற 4 நபர்களை காவல்துறையினர் கைது சிறையில் அடைத்தனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை பகுதியில் ராஜேஷ் என்பவர் அவரது தோட்டத்தில் 10 பசு மாடுகள் வைத்து வளர்த்து வந்தார். இந்நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன்பாக இரவில் கட்டியிருந்தார். காலையில் பார்க்கும் போது இரண்டு பசு மாடுகள் காணவில்லை. இந்நிலையில் தொடர்ந்து அருகே உள்ள தோட்டங்கள் என பல இடங்களில் தேடியும் பசு மாடு கிடைக்காத நிலையில் பெரியகுளம் வடகரை காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. காவல்துறையினர் விசாரணை செய்ததில் பெரியகுளம் அருகே உள்ள தெய்வேந்திரபுரத்தை சேர்ந்த சிவபிரகாசம் மற்றும் பாண்டி என்ற இரண்டு இளைஞர்கள் சேர்ந்து பசு மாட்டை திருடி ஆண்டிபட்டி பகுதியை சேர்ந்த பார்த்திபன், சிவக்குமார் ஆகியோர் மூலம் பசு மாடுகளை விற்றது தெரியவந்தது.

ஊரடங்கால் வேலையிழப்பு! குடிக்க பணம் தேவை… ஆடு,மாடுகளை திருடும் மர்ம கும்பல்!!

இதனை தொடர்ந்து 4 நபர்களையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்ததில் இவர்கள் பெரியகுளம் பகுதியில் திருடப்படும் மாடு, ஆடு, கோழிகளை ஆண்டிபட்டி பகுதியில் விற்பனை செய்து கொடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவர்களிடம் இருந்த பசு மாடுகளை மீட்ட காவல்துறையினர் அதை மாட்டின் உரிமையாளர் ராஜேஷிடம் ஒப்படைத்தனர். மேலும் பசு மாடுகளை திருடியவர்களை விசாரணை செய்ததில் ஊரடங்கால் கையில் பணம் இல்லை எனவும், மது குடிக்க பணம் தேவைப்பட்டதால் பசுமாடுகளை திருடி விற்றதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர். மேலும் இவர்கள் கடந்த 50 நாட்களாக உள்ள நூற்றுக்கணக்கான ஆடு, கோழிகளை திருடி விற்றதும் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து 4 இளைஞர்களையும் கைது செய்து, வழக்கு பதிவு செய்த பெரியகுளம் வடகரை காவல்துறையினர், நீதிமன்றத்தில் நிறுத்தி சிறையில் அடைத்தனர்.