ஊரடங்கால் பாதிப்புக்குள்ளாகும் விவசாயிகள்.. குறைகளை தெரிவிக்க புகார் எண்கள் அறிவிப்பு !

 

ஊரடங்கால் பாதிப்புக்குள்ளாகும் விவசாயிகள்.. குறைகளை தெரிவிக்க புகார் எண்கள் அறிவிப்பு !

பாதிப்புக்குள்ளாகும் விவசாயிகள் அலுவலர்களுக்கோ அல்லது சிறப்பு காவல் கட்டுப்பாட்டு அறைக்கோ தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம்.

ஊரடங்கு உத்தரவால், விளைவித்த பொருட்களை மார்கெட்டுகளுக்கு அனுப்ப முடியாமல் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தனர். அதனால் விளைபொருட்களை அரசே நேரடியாக கொள்முதல் செய்து வருகிறது. ஆனால், விவசாயிகள் அந்த பொருட்களை கொண்டு செல்வதற்கு பல்வேறு இடையூறுகள் இருப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். அதாவது  இரண்டு , நான்கு சக்கர வாகனங்களில் செல்வோரை சில இடங்களில் காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்வதால், தங்களுக்கு சிரமமாக இருப்பதாக விவசாயிகளிடமிருந்து புகார்கள் வந்தது. 

ttn

இதனையடுத்து திருச்சி சரகத்துக்கு உட்பட்ட 5 மாவட்டங்களில் விவசாயிகளின் குறைபாடுகளை தீர்க்க ஒவ்வொரு மாவட்டத்துக்கும் டி.எஸ்.பி நிலையிலான ஒரு பொறுப்பு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். பாதிப்புக்குள்ளாகும் விவசாயிகள் அலுவலர்களுக்கோ அல்லது சிறப்பு காவல் கட்டுப்பாட்டு அறைக்கோ தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம். அலுவலர்களின் தொடர்பு எண்கள் பின்வருமாறு;

திருச்சி மாவட்டம், சிவசுப்பிரமணியன்- 9498158901,
புதுக்கோட்டை மாவட்டம், குணசேகரன்- 9498150081, 
கரூர் மாவட்டம், சுப்பிரமணியன்- 9498104410,
பெரம்பலூர் மாவட்டம், ரவிச்சந்திரன்-9498153276,
அரியலூர் மாவட்டம்,கண்ணன்- 9498167666

சிறப்பு காவல் கட்டுப்பாட்டு அறையின் எண்கள் பின்வருமாறு; 

திருச்சி 0431-2333638,
புதுக்கோட்டை 04322-266966 
கரூர் 04324-255100,
பெரம்பலூர் 04328-224962,
அரியலூர் 04329-222216.