ஊரடங்கால் கரைபுரண்டோடும் கள்ளச்சாராயம்! – கள்ளக்குறிச்சியில் மட்டும் 21 ஆயிரம் லிட்டர்

ஊரடங்கால் கரைபுரண்டோடும் கள்ளச்சாராயம்! – கள்ளக்குறிச்சியில் மட்டும் 21 ஆயிரம் லிட்டர்

தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக கள்ளச்சாராயம் காய்ச்சுவது ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மட்டும் 21 ஆயிரம் லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக கள்ளச்சாராயம் காய்ச்சுவது ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மட்டும் 21 ஆயிரம் லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் அத்தியாவசிய தேவை கடைகள் தவிர்த்து மற்ற அனைத்தும் பூட்டப்பட்டுள்ளன. இதனால் மது அருந்துபவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். திடீரென்று மது இல்லை என்ற அதிர்ச்சியில் தற்கொலை செய்துகொண்டவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

illegal-arrack

இந்த நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக கடந்த 25 நாட்களில் 949 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மொத்தம் 27,511 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மட்டும் 21 ஆயிரம் லிட்டர் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காடுகளில், மக்கள் நடமாட்டம் இல்லாத இடங்களில் மட்டும் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறது என்று கூற முடியாது. யூடியூப் பார்த்து குக்கரில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்தவர்களும் உள்ளனர். கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதுபோன்ற உயிரிழப்பைத் தவிர்க்க அரசு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.