ஊரடங்கால் அதிகரிக்கும் குடும்ப வன்முறைகள்.. பெண்கள் புகார் செய்ய அதிகாரிகளின் எண்களை அறிவிக்கக்கோரி வழக்கு!

 

ஊரடங்கால் அதிகரிக்கும் குடும்ப வன்முறைகள்.. பெண்கள் புகார் செய்ய அதிகாரிகளின் எண்களை அறிவிக்கக்கோரி வழக்கு!

ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு, பெண்களுக்கு எதிராக இதுவரை  257 புகார்கள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸில் இருந்து மக்களை காக்க ஊரடங்கு உத்தரவிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்ததோ இல்லையோ.. குடும்ப சண்டைகள் அதிகமாக நடந்து வருகின்றன. ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு, பெண்களுக்கு எதிராக இதுவரை  257 புகார்கள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ttn

இந்நிலையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாக வழக்கறிஞர் சுதா ராமலிங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனுவில், தமிழகத்தில் உள்ள 31 மாவட்டங்களில் 7 மாவட்டங்களில் மட்டுமே அதிகாரிகளை அணுக முடிகிறது. மற்ற 24 மாவட்டங்களில் அதிகாரிளை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் குடும்ப வன்முறை புகார்களை விசாரிக்க அவசர உத்தரவுகளை அரசு பிறப்பிக்கவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.  

மேலும், மற்ற மாநிலங்களில் காணொளி மூலம் குடும்ப வன்முறை புகார்களை விசாரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பு அலுவலர்களின் விளம்பரப்படுத்த வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள், வரும் 23 ஆம் தேதிக்குள் அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.