ஊரக உள்ளாட்சி மறைமுகத் தேர்தல் 27 இடங்களில் நடைபெறவில்லை- மாநில தேர்தல் ஆணையம் 

ஊரக உள்ளாட்சி மறைமுகத் தேர்தல் 27 இடங்களில் நடைபெறவில்லை- மாநில தேர்தல் ஆணையம் 

மாவட்ட ஊராட்சித் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஒரு இடத்திலும், ஊராட்சி ஒன்றியங்களில் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் 27 இடங்களிலும் நடைபெறவில்லை என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மாவட்ட ஊராட்சித் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஒரு இடத்திலும், ஊராட்சி ஒன்றியங்களில் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் 27 இடங்களிலும் நடைபெறவில்லை என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் இரண்டு கட்டமாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் கடந்த 6 ஆம் தேதி பதவியேற்றனர். அதனைத் தொடர்ந்து, இன்று 27 மாவட்டங்களில் 5 பதவிகளுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் நேற்று நடைபெற்றது. 17 மாவட்டங்களில் உள்ள ஊராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கும், 314 ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கும்,  9624 கிராம ஊராட்சி துணைத் தலைவர் பதவிக்கும் மறைமுக தேர்தல்  நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் பல்வேறு காரணங்களால் 27 இடங்களில் தேர்தல் முறையாக நடத்தப்படவில்லை என மாநிலத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மாநில தேர்தல் ஆணையம்

இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஊராட்சி ஒன்றியங்களில் சட்டம்-ஒழுங்குப் பிரச்னை காரணமாக 12 இடங்களிலும், போதிய எண்ணிக்கையில் உறுப்பினர்கள் வருகையின்மை காரணமாக 13 இடங்களிலும், தேர்தல் நடத்தும் அலுவலரின் உடல்நலக்குறைவு காரணமாக 2 இடங்களிலுமாக மொத்தம் 27 ஊராட்சி ஒன்றியங்களில் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் நடைபெறவில்லை” என குறிப்பிட்டுள்ளது. 

கடலூர், திருவண்ணாமலை, மணப்பாறை, சிவகங்கை, பரமத்தி வேலூர், திருப்புவனம், கோவில்பட்டி உள்ளிட்ட ஊராட்சி ஒன்றியங்களில் மறைமுகத் தேர்தல் நடைபெறவில்லை என்பது குறிப்பிடதக்கது.