ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.6374 கோடி மானியம் வழங்க வேண்டும் .. கடிதத்தை நேரில் கொடுத்த அமைச்சர் !

 

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.6374 கோடி மானியம் வழங்க வேண்டும் .. கடிதத்தை நேரில் கொடுத்த அமைச்சர் !

கர்ப்புறம் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்பட வேண்டிய தொகையை வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்

14 ஆவது நிதி ஆணையத்தின் பரிந்துரையின் படி  தமிழ்நாடு நகர்ப்புறம் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்பட வேண்டிய தொகையை வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தை  நிர்மலா சீதாராமனிடம் கொடுப்பதற்காகப் புதுடெல்லி சென்ற அமைச்சர் எஸ்.பி வேலுமணி, அதனை அவரிடம் வழங்கினார். 

ttn

அந்த கடிதத்தில் தமிழ்நாடு நகர்ப்புறம் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்குக் கொடுக்க வேண்டிய செயலாக்க மானிய தொகை ரூ.2029.22 கோடியையும், அடிப்படை மானியத் தொகை ரூ.4,345.47 கோடியையும் விடுவிக்க வேண்டும் என்றும் மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு இந்த பணம் தேவைப் படுகிறது என்றும் ஏற்கனவே 2 ஆவது தவணையாக 2018–ம் ஆண்டுக்கான மானியத்தொகை ரூ.1608.03 கோடியை வழங்கியதற்கு நன்றி என்றும் அக்கடிதத்தில் கூறியுள்ளார்.  மேலும், 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்து விட்டது என்றும் நகர்ப்புற  மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடத்தும் முயற்சியில் தமிழக தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். அந்த புகைப்படங்களை அமைச்சர் வேலுமணி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.