ஊரக உள்ளாட்சித் தேர்தல்.. மீண்டும் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது திமுக !

 

ஊரக உள்ளாட்சித் தேர்தல்.. மீண்டும் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது திமுக !

நேற்று, மாநில தேர்தல் ஆணையருக்கு எதிராக திமுக நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர்ந்தது.

அனைத்து மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் வரும் 27 மற்றும் 30 ஆம் தேதி நடைபெறும் என்ற மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது. அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் திமுக மனுத் தாக்கல் செய்தது. புதியதாகப் பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் வார்டு மறுவரையறை பணி நிறைவடையும் முன்னரே தேர்தல் அறிவித்து விட்டதாக மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதனை விசாரித்த நீதிபதிகள், புதியதாகப் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களிலும் தேர்தல் நடத்த வேண்டாம் என்றும் மற்ற மாவட்டங்களில் 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி தேர்தல் நடத்தலாம் என்றும் உத்தரவிட்டனர். 

ttn

அதனையடுத்து, மாநில தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்த உள்ளாட்சித் தேர்தலின் அறிவிப்பைத் திரும்பப்பெற்றுக் கொண்டு புதிய தேர்தல் அறிவிப்பை வெளியிட்டது. அதன் படி, தேர்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று, மாநில தேர்தல் ஆணையருக்கு எதிராக திமுக நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர்ந்தது. அதனைத் தொடர்ந்து, இன்று மீண்டும் மாநில தேர்தல் ஆணையம் மற்றும் தலைமைச் செயலாளருக்கு  எதிராக உச்சநீதிமன்ற தீர்ப்பை முறையாகப் பின்பற்றவில்லை என்று அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.