ஊரக உள்ளாட்சித் தேர்தல்.. பெரம்பலூர் முடிவுகள் இணையதளத்தில் இல்லை !

 

ஊரக உள்ளாட்சித் தேர்தல்.. பெரம்பலூர் முடிவுகள் இணையதளத்தில் இல்லை !

முடிவடைந்த வாக்கு எண்ணிக்கைகளின் முடிவுகள் மாநில தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது. 

இரண்டு கட்டங்களாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. சில காரணங்களால் வாக்கு எண்ணிக்கை தாமதம் ஆகிப் பல இடங்களில் விடிய விடிய வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தற்போது வரை 16 மாவட்டங்களில் வாக்கு எண்ணிக்கை முழுவதுமாக முடிவடைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.முடிவடைந்த வாக்கு எண்ணிக்கைகளின் முடிவுகள் மாநில தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது. 

ttn

இதில், மாவட்ட வாரியாகவும் உள்ளாட்சி பதவிகள் வாரியாகவும் முடிவுகள் பதிவேற்றப்பட்டு வருகின்றன. தேர்தல் நடக்கும் அனைத்து மாவட்டங்களின் முடிவுகளும் இணையதளத்தில் இடம்பெற்றிருக்கும் நிலையில், பெரம்பலூர் மாவட்ட தேர்தல் முடிவுகள் அதில் இல்லை என்று புகார் எழுந்துள்ளது.  மாவட்ட கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்,ஊராட்சித் தலைவர் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆகிய அனைத்து கட்டங்களிலும் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் பெயர் இடம்பெறாமல் பூஜ்ஜியங்கள் நிரம்பியுள்ளன. இதனால், பெரம்பலூர் மாவட்ட வாக்காளர்கள் தேர்தல் முடிவுகளைத் தெரிந்து கொள்ள முடியவில்லை என்று தெரிவித்துள்ளனர்.