ஊரக உள்ளாட்சித் தேர்தல்..7 வேட்பாளர்களை வென்று ஊராட்சி மன்ற தலைவரான 79 வயது மூதாட்டி !

 

ஊரக உள்ளாட்சித் தேர்தல்..7 வேட்பாளர்களை வென்று ஊராட்சி மன்ற தலைவரான 79 வயது மூதாட்டி !

அரிட்டாபட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு வீரம்மாள் என்ற 79 வயது மூதாட்டி 7 வேட்பாளர்களை எதிர்த்துப் போட்டியிட்டார். 

இரண்டு கட்டங்களாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மும்முரமாக நடைபெற்று வருகிறது. சில இடங்களில் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் மேலூர் ஒன்றியத்தில் மொத்தமாக 37 ஊராட்சிகள் உள்ளன. அதில் ஒன்றான அரிட்டாபட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு வீரம்மாள் என்ற 79 வயது மூதாட்டி 7 வேட்பாளர்களை எதிர்த்துப் போட்டியிட்டார். 

ttn

இன்று நடந்த வாக்கு எண்ணிக்கையில் இவரை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளர்களை விட  195 வாக்குகள் அதிகமாகப் பெற்று  வீரம்மாள் வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு அப்பகுதியில் இருக்கும் பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். மிக அதிக வயது கொண்ட மூதாட்டி ஊராட்சி மன்ற தலைவராக வெற்றி பெறுவது இதுவே முதல்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

tt n

இது குறித்துப் பேசிய அந்த மூதாட்டி, தனது வெற்றியை இப்பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு சமர்ப்பிப்பதாகவும், இந்த பகுதியில் உள்ள தண்ணீர் பிரச்சனையைத் தீர்ப்பதே எனது முதல் வேலை என்றும் தெரிவித்துள்ளார். வீரம்மாள் ஏற்கனவே இரண்டு முறை ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட வீரம்மாள், தன்னம்பிக்கையுடன் மூன்றாவது முறை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்