ஊரக உள்ளாட்சித் தேர்தல்: மேலும் ஒரு மூதாட்டி வெற்றி! 

 

ஊரக உள்ளாட்சித் தேர்தல்: மேலும் ஒரு மூதாட்டி வெற்றி! 

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர், ஒன்றியக்குழு உறுப்பினர் மாவட்ட குழு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கான  91,975 இடங்களுக்குத் தேர்தல் நடைபெற்றது.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர், ஒன்றியக்குழு உறுப்பினர் மாவட்ட குழு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கான  91,975 இடங்களுக்குத் தேர்தல் நடைபெற்றது. முதல் கட்ட தேர்தலில்  76.19 %  வாக்குகளும், இரண்டாம் கட்ட தேர்தலில் 77.73% வாக்குகளும் பதிவாகியது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. ஒரு சில இடங்களில் தேர்தல் முடிவுகள் வெளியாகின. ஆனால், பல இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 

LocalBodyElectionResult
இந்நிலையில் மேட்டுப்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு சுயேச்சையாக போட்டியிட்ட 82 வயது மூதாட்டி விசாலாட்சி வெற்றிப்பெற்றுள்ளார். ஏற்கனவே மதுரை மாவட்டம் மேலூர் ஒன்றியத்திலுள்ள அரிட்டாபட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு வீரம்மாள் என்ற 79 வயது மூதாட்டி  ஊராட்சி மன்ற தலைவராக வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடதக்கது,