ஊரக உள்ளாட்சித் தேர்தல்.. உயர்நீதி மன்றத்தில் திமுக மனு !

 

ஊரக உள்ளாட்சித் தேர்தல்.. உயர்நீதி மன்றத்தில் திமுக மனு !

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை உயர்நீதி மன்றத்தில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மனு ஒன்றை அளித்துள்ளார். 

கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருக்கும் உள்ளாட்சித் தேர்தல் இந்த மாதம் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. வார்டு மறுவரையரை நடக்கவில்லை என்று இட ஒதுக்கீடு சரியாக பின்பற்றவில்லை என்றும் திமுக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

ttn

அந்த வழக்கை நீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில், புதிதாகப் பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் வார்டு மறுவரையரை பணிகள் முடியவில்லை என்று மீண்டும் வழக்கு தொடர்ந்தது. அதன் பின்னர், புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் தேர்தல் நடத்தலாம் என்று உச்சநீதிமன்றம் இறுதித் தீர்ப்பு வழங்கியது. அதனையடுத்து, டிசம்பர் 27 மற்றும் 30 ஆம் தேதி  உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. 

ttn

அதன் படி, இன்று காலை முதல் அனைத்து பகுதிகளிலும் முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திமுக சார்பில்  திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை உயர்நீதி மன்றத்தில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மனு ஒன்றை அளித்துள்ளார். 

tt

அதில், ஊரக உள்ளாட்சித் தேர்தலின் வாக்குப்பெட்டிகள் வைக்கும் இடத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என்றும் அனைத்து கட்சி பிரதிநிதிகளையும் கண்காணிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மனு விசாரணையை வரும் 30 ஆம் தேதிக்குத் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.