ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு பரிசீலனை இன்று தொடக்கம் !

 

ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு பரிசீலனை இன்று தொடக்கம் !

தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களுக்கான பரிசீலனை இன்று தொடங்குகிறது. இதில் முழுமையாகப் பூர்த்தி செய்யப்படாத மனுக்களும், உரியத் தகுதி இல்லாத மனுக்களும் தள்ளுபடி செய்யப்படும்.

வரும் டிசம்பர் 27 மற்றும் 30 ஆம் தேதி ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 9 ஆம் தேதி தொடங்கியது. கடந்த 8 நாட்களாக நடைபெற்ற இந்த மனுத்தாக்கலில் கடந்த சனிக்கிழமை வரை 1,65,659 பேர் மனுத்தாக்கல் செய்தனர். கடைசி நாளான நேற்று ஆயிரக் கணக்கானோர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். மொத்தமாக 2 லட்சம் பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

ttn

தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களுக்கான பரிசீலனை இன்று தொடங்குகிறது. இதில் முழுமையாகப் பூர்த்தி செய்யப்படாத மனுக்களும், உரியத் தகுதி இல்லாத மனுக்களும் தள்ளுபடி செய்யப்படும். இன்று தொடங்கி 19 ஆம் தேதி வரை பரிசீலனை நடைபெறவுள்ளது. 19 ஆம் தேதி மாலை பரிசீலிக்கப்பட்ட வேட்பாளர்களின் பட்டியலைத் தேர்தல் ஆணையம் வெளியிடும். இதன் முடிவில் ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கும் ஒவ்வொரு கட்சியிலும் எத்தனை பேர் போட்டியிடுவார்கள் என்பது தெரிய வரும். பரிசீலிக்கப் பட்ட வேட்பாளர்களின் மனுக்கள் பட்டியல் வெளியானதும் தேர்தலுக்கான பிரச்சாரம் தொடங்கும்.