ஊரக உள்ளாட்சித் தேர்தலின் இரண்டாம் கட்ட தேர்தல் நிறைவு !

 

ஊரக உள்ளாட்சித் தேர்தலின் இரண்டாம் கட்ட தேர்தல் நிறைவு !

இன்று காலை ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கியது.

ஊரக உள்ளாட்சித் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு கடந்த 27 ஆம் தேதி நடைபெற்றது. வெளியூரில் தங்கிச் செல்லும் மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். ஓரிரு இடங்களில் பதற்றம் நிலவினாலும், பல இடங்களில் வாக்குப்பதிவு சுமுகமாக நடைபெற்று முடிந்தது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணியையும் கடந்து ஒரு சில இடங்களில் நடந்தது. மொத்தமாக 156 ஒன்றியங்களிலும் சேர்த்து 76.1% வாக்குப்பதிவு ஆகியுள்ளது என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது 

ttn

அதனைத் தொடர்ந்து, இன்று காலை ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கியது. இந்த தேர்தலில்  ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சித் தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட வார்டு உறுப்பினர் ஆகிய 4 பணியிடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்று மாலை 5 மணி வரை நடைபெற்ற இந்த வாக்குப்பதிவு சுமுகமாக நடந்து முடிந்தது. தற்போது, வாக்குப்பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டு செல்லும் பணி நடைபெற்று வருகிறது.