ஊதிய உயர்வு கேட்டு 2வது நாளாக மருத்துவர்கள் போராட்டம்! 

ஊதிய உயர்வு கேட்டு 2வது நாளாக மருத்துவர்கள் போராட்டம்! 

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் 2வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் 2வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

doctors

மற்ற மாநிலங்களில் மருத்துவர்களுக்கு வழங்குவது போல் தகுதிக்கேற்ற ஊதியம் வழங்க வேண்டும், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசு மருத்துவர் பணியிடங்களை உருவாக்க வேண்டும், பட்ட மேற்படிப்பு மருத்துவ மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறைச் செயலருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் ‌‌2வது நாளாக போராட்டம் தொடர்கிறது. இதனால் மருத்துவமனைகளில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.